அனுபவிக்கும் வரை அனுபவித்துவிட்டு கை விரித்த நடிகர்கள்.. கணவரிடம் தஞ்சம் புகுந்த நடிகையின் நிலைமை

By Staff

சென்னை: தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமா உலகில் திறமையான நடிகைகள் பலர் இருந்தாலும், நடிப்பினை, படத்தின் கதையையினை நம்பிப் படம் தயாரிக்க முன் வரும் தயாரிப்பாளர்கள் அரிதினும் அரிது. இதன் காரணமாகத்தான் தமிழ் சினிமாவின் தரமும், வெளியாகும் மொத்த படங்களின் வெற்றி சதவீதமும் நாள்க்கு நாள் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்து வருகின்றது. அதேநேரத்தில், சினிமா மீது இருக்கும் ஆசையால் சினிமாவிற்குள் நுழைந்து வாழ்க்கையைத் தொலைத்த பல நடிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக பல நடிகைகள், ஆரம்பத்தில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடிக்க ஓ.கே. சொல்லி மக்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றார்கள். அதன் பின்னர், ஆண்டுகள் போக போக கிளாமரில் களமிறங்கிவிடுகின்றார்கள். அப்படி கிளாமரில் களமிறங்க நினைக்கும் நடிகைக்கு அவரது கணவர் தடையாக இருக்கின்றாராம். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இந்த நடிகையும் வட மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைதான். தனது டீன் ஏஜிலேயே சினிமா வாழ்க்கையை தமிழ் சினிமாவில் தொடங்கிய இந்த நடிகை, தொடக்கத்தில் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார். அதேநேரத்தில், ஆரம்ப காலகட்டத்தில் தனது முகத்தை மக்களுக்கு காட்டவேண்டும் என, ஆண்டுக்கு ஒரு படத்திலாவது நடித்து வந்தார்.

tamil cinema gossip cinema gossip kolly wood gossip

இப்படி இருந்த நடிகையைப் பார்த்து பலரும், ஒரு மூத்த நடிகையின் சாயல் இருப்பதாக கூறினார்கள். இது அந்த நடிகைக்கு கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேநேரத்தில் இந்த ஓவர் பில்டப் அவருக்கு ஓரளவுக்கு பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. இதன் மூலம் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவுக்கு முன்னேறினார். இதற்கிடையில் இரண்டு நடிகர்களோடு இந்த நடிகை டேட்டிங், நைட் அவுட், வீக் எண்ட் பார்ட்டி என ஜாலியாக இருந்துள்ளார்.

இரண்டு நடிகர்கள்: இதில் ஒரு நடிகர் ஏற்கனவே திருமணமானவர். ஒரு நடிகர் ரிலேஷன்ஷிப்பின் எக்ஸ்ட்ரீம் வரைக்கும் ஓ.கே, ஆனால் கல்யாணம் மட்டும் வேண்டவே வேண்டாம் என இருப்பவர். நடிகையோடு மப்பும் மந்தாரமுமாக இருந்த இரு நடிகர்கள் ஒரு கட்டத்தில் விலகிக் கொண்டார்கள். இதற்கிடையில் நடிகை தனது உடல் எடையில் மாற்றம் செய்கின்றேன் என, கொஞ்ச காலம் மெடிடேஷனில் கவனம் செலுத்த, பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

கணவர்: இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல், வான்டேடாக கிளாமரில் கால் வைத்த நடிகைக்கு கொஞ்சம் அது கை கொடுத்தது. ஏற்கனவே நடிகர்கள் விட்டுப்போன வருத்தத்தில் இருந்த நடிகைக்கு, ஆறுதல் சொல்ல வந்த நட்பு வட்டத்தில் இருந்த ஒருவர், கொஞ்சம் ஓவராகவே ஆறுதல் சொன்னதால், இவர்களுக்கு இடையில் நெருக்கம் அதிகரித்தது. அதன் பின்னர் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, கணவர் கிளாமரே கூடாது எனக் கூறிவிட்டாராம்.

கிளாமர்: ஆனால், அம்மனிக்கு கிளாமரில் புகுந்து விளையாடினால்தால் மார்க்கெட்டில் தொடர்ந்து இருக்க முடியும் எனக் கூறியுள்ளார். ஆனால் கணவரோ, முடியவே முடியாது எனக் கூறியுள்ளார். ஆனால் நடிகைக்கு தற்போது கண் முன் இருக்கும் இரண்டு நடிகைகளும், மார்கெட்டில் இருந்து கொஞ்சம் ஓரங்கட்டப்பட்ட காலகட்டத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்ததால்தான் மீண்டும் மார்கெட்டின் டாப் பொசிஷனுக்கு வந்துள்ளார்கள் என்பதைப் பார்த்து, தானும் கிளாமரில் புகுந்து விளையாட ஆர்வமாக இருக்கின்றாராம். ஆனால் கணவர் நோ சொல்லிவிட்டதால் என்ன செய்வது எனத் தெரியாமல், இன்ஸ்டகிராமில் மட்டும் கொஞ்சம் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றாராம் அந்த நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X