நடிகரை கையில் போட ரொம்பவும் இறக்கம் காட்டிய நடிகை.. தலையிலேயே அடித்துக் கொண்ட இயக்குநர்!
சென்னை: இந்த நடிகை கதக்களி தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். வந்த புதிதில், சேட்டா.. சரி சாரே.. நிங்கள் ஏது பறஞ்சாலும் சரி என தமிழும் மலையாளமும் கலந்து கட்டி பேசிக் கொண்டு இருந்தார். ஆனால் ஒரு சில படங்கள் கடந்த பின்னர், நடிகை எடுத்த முடிவுகளே வேறு. அதைப் பார்த்து இயக்குநர் தலை தலையாய் அடித்துக் கொண்டுள்ளார்.
அதாவது தனது படத்தில் கமிட் செய்திருந்த இயக்குநர், அவரது முதல் படத்தில் நடிகை எப்படி நடந்து கொண்டாரோ அதேபோல் இந்த படத்திலும் இருப்பார் என நம்பி சேர்த்துள்ளார். ஆனால் நடிகை எடுத்த முடிவு இயக்குநருக்கு தெரியாது அல்லவா? அந்த படத்தில் இயக்குநர் கமிட் செய்தது பெரிய நடிகரை. அந்த நடிகருக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் விசயங்கள் என்றாலே ஆகாது. இது மட்டும் இல்லாமல் டீசன்டான நடிகர் என பெயர் எடுத்த நடிகர்தான் அந்த படத்தில் கமிட் ஆகியிருந்தார்.

நடிகை பார்த்த வேலை: ரொமான்ஸ் காட்சிகள், க்ளோஸான காட்சிகள் என எதில் நடித்தாலும் நடிகைகளிடம் கொஞ்சம் விலகியே இருப்பார். இப்படியான நடிகரை கைக்குள் போட்டு வைத்துக் கொண்டால், அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்கலாம் என நடிகை திட்டம் போட்டுள்ளார். இதனால் பாடல் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் என எல்லா காட்சிகளிலும் ரொம்பவும் கிளாமராக ஆடைகள் அணிந்து கொண்டு, நடிகருடன் நடித்துள்ளார்.
மிரட்டிவிட்ட நடிகர்: ஒரு கட்டத்தில் கடுப்பான நடிகர், இயக்குநரை அழைத்து என்ன இது எல்லாம். இந்த காட்சிகளில் ஏன் நடிகை ரொம்பவும் என்னிடம் க்ளோஸ் ஆக வருகிறார். எதற்காக இது எல்லாம், சொல்லி வையுங்கள் இல்லை என்றால் நான் அனைவர் முன்னாலும் நடிகையை விளாச வேண்டி வரும் எனத் திட்டியுள்ளார். நடிகர் இவ்வாறு கூறுவதற்கு பின்னர் இயக்குநர் நடிகருக்கும் நடிகைக்கும் இடையிலான காட்சிகளையே மொத்தமாக குறைத்து விட்டார். அது மட்டும் இல்லாமல் படத்தில் அவர் திட்டமிட்டு வைத்திருந்த ஒரு பாடல் காட்சியையும் எடுக்கவில்லை. தலையில் அடித்துக் கொண்ட இயக்குநர் இந்த நடிகைக்கு எதுக்கு இந்த வேலை என உதவி இயக்குநர்களிடம் புலம்பினாராம்.


Click it and Unblock the Notifications











