நடிகையின் காதல் முறிவுக்கு காரணம் அவரது இல்லீகல் ரிலேஷன் ஷிப்பா? விஷயம் தெரிந்த ஹீரோ கிரேட் எஸ்கேப்!

By Staff

சென்னை: இந்த நடிகை இப்போதுதான் கொஞ்சம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார். ஆனால் வயது ஆகிக்கொண்டே போவதாலும் ஏற்கனவே இருந்த காதலர்கள் எல்லாம் கழட்டி விட்டுவிட்டு போனதாலும் நடிகை இப்போது காதலித்து வந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். எல்லாம் நல்லபடியாக போய்கொண்டு இருந்த நேரத்தில் உன் காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் என நடிகர் கிரேட் எஸ்கேப் ஆகியுள்ளார்.

அதாவது இந்த நடிகை கொஞ்சம் விவகாரமான நடிகை என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே பல பிரேக்-அப்களை பார்த்துவிட்டதால் நடிகைக்கு பிரேக்-அப் என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. ஆனால் இப்போது உள்ள காதலை திருமணத்தில் முடித்துவிடவேண்டும் என நடிகை தீயாக வேலை பார்த்து வந்துள்ளார். அதே நேரத்தில் தனது காதலனான ஹீரோ ஷூட்டிங்கில் செம பிஸியாக இருந்ததால், அவுட்டிங், ஷாப்பிங், பார்ட்டி என எங்கு சென்றாலும் தனது பாய் பெஸ்டி ஒருவரைத்தான் அதிகம் அழைத்துச் செல்வாராம்.

அவர்கள் வெளியே செல்வது நடிகருக்கு தெரிந்துதான் நடக்குமாம். ஆனால், ஒரு நாள் பார்ட்டியில் நடிகைக்கும் அவரது பாய் பெஸ்டிக்கும் இடையில் நெருக்கம் அதிகரிக்க, பொத்தி வைத்து என்ன பயன், என இருவரும் நன்றாகவே அணைத்துக் கொண்டு இருந்துள்ளார்கள். அப்படி இருக்கும்போது, ஏதோ போதையில் ஒரு முறை தெரியாமல் நடந்து விட்டது என நடிகையும் நினைக்கவில்லை, நடிகையின் பாய் பெஸ்டியும் நினைக்கவில்லையாம்.

Tamil Cinema Gossip Actress Who Very Close With Her Boy Bestie Actor Say Breakup

பாய் பெஸ்டி: இவர்களின் இந்த நெருக்கம் அடிக்கடி அரங்கேறியுள்ளது. நடிகையின் ஆக்டிவிட்டியில் கடந்த சில மாதங்களாக மாற்றம் அதிகம் தெரிந்ததால், நடிகையின் ஆக்டிவிட்டி குறித்து விசாரித்து சொல்ல நடிகர் ஒருவரை நடிகைக்கு தெரியாமல் நியமித்தாராம். இது தெரியாத நடிகை, வழக்கம்போல் பாய் பெஸ்டியுடன் செம ஜாலியாக இருந்துள்ளார்.

பளார்: பாய் பெஸ்டியுடன் இருக்கும் போது நடிகர் போன் செய்தால் தான் வேறு ஒரு இடத்தில் இருப்பதாக கூறி சமாளித்து வந்துள்ளார். இதனால் கடுப்பான நடிகர், தனது ஷூட்டிங்கை எல்லாம் முடித்துவிட்டு வந்து, நடிகையை சந்தித்து, சில பல பளார் கேள்விகளைக் கேட்டுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகைக்கு தூக்கிவாரிப் போட்டுள்ளது. சரி ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என முயற்சி செய்துள்ளார். காலில் எல்லாம் விழுந்து கெஞ்சினாராம்.

ஷாக்: ஆனால் நடிகர் இந்த நடிகையை திருமணம் செய்து கொண்டால், நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என முடிவெடுத்து, திருமணமே வேண்டாம், ஆளை விட்டால் போதும் என கிரேட் எஸ்கேப் ஆகியுள்ளார். இது தொடர்பாக முதலில் நடிகர்தான் வேறு ஒரு நடிகையுடன் டேட்டிங்கில் இருக்கிறார் என கூறப்பட்டது, இப்போது விஷயம் தெரிந்தவர்கள் நடிகையில் தில்லாலங்கடி வேலை பார்த்து ஷாக்காகி உள்ளார்களாம். நடிகர் போனால் என்ன, வேறு ஒருவரைப் பார்த்துக் கொள்ளலாம், எத்தனை பிரேக்-அப்களை பார்த்திருக்கிறேன் என தனது நட்பு வட்டத்தில் கூறி வருகிறாராம் நடிகை. நடிகை குறித்து தெரிந்து கொண்ட கோலிவுட் வட்டாரத்தில் உள்ள நடிகர்களும் இளம் ஸ்டார்களும் நடிகை கலந்து கொள்ளும் பார்ட்டிக்கு தங்களை அழைக்க வேண்டாம், அழைத்தாலும் போகக் கூடாது என முடிவெடுத்துள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X