நடிப்பில் சாதிக்க வந்த நடிகை.. சீரழித்த இயக்குநர்.. நடுத்தெருவில் நிற்கும் நடிகையின் குடும்பம்!

By Staff

சென்னை: இந்த நடிகை அண்டை மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர். நடிப்பில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், நாம் நன்றாக நடித்து வெற்றி படங்கள் கொடுத்தால்தான் தனது குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தில் திறமையை நிரூபிக்க தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் இப்போது அந்த நடிகையின் நிலைமை ரொம்பவும் மோசமாக உள்ளது.

நடிகை தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததும் நல்ல நல்ல இயக்குநர்களை சந்தித்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தார். இவர் வெகு சில படங்களிலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அப்படியான நடிகை ஒரு கட்டத்தில் தான் நிகழ்ச்சி ஒன்றில் அந்த இயக்குநரைச் சந்திக்கிறார். அந்த இயக்குநரோ கொஞ்சம் விவகாரமான இயக்குநர். அவர் நடிகையைப் பார்த்ததும் நடிகையிடம் பேச்சுக் கொடுத்து, தன்னிடம் கதை இருப்பதாகவும், நேரம் கொடுத்தால் கதை சொல்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

நடிகையும் அந்த இயக்குநருக்கு கதை சொல்ல நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். இயக்குநரும் நடிகையை வீட்டில் சந்தித்து கதை சொல்லி உள்ளார். அப்போது நடிகையுடன் நடிகையின் தாயார் மற்றும் சகோதரி இருந்துள்ளார்கள். நடிகை ஏற்கனவே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததில் நன்றாகவே சம்பாதித்திருந்தார். எனவே இயக்குநர் நடிகையை தனது வலையில் வீழ்த்த நினைத்து திட்டம் தீட்டினார். அதில் நடிகையின் தாயார் மற்றும் சகோதரியை பகடையாக பயன்படுத்திக் கொண்டார்.

Tamil Cinema Gossip Actress Wife and Her Family Life Ruined By Director

ஏமாற்றப்பட்ட நடிகை: ஒரு கட்டத்தில் நடிகையை இயக்குநர் மடக்கியுள்ளார். அதன் பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உள்ளார்கள். அப்போது நடிகை பல வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுத்துள்ளார். நடிகை அவற்றையெல்லாம் நினைவுகளுக்காக தான் எடுத்துள்ளார். ஆனால் நடிகையிடம் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை இயக்குநர் ஆசை வார்த்தைகளை பேசி எப்படியோ வாங்கிவிட்டார். அதன் பின்னர் மெல்ல மெல்ல நடிகையை கழட்டி விட்டுள்ளார். அதன் பின்னர் பெரிய இடத்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவேன் என மிரட்டியும் இயக்குநர் நடிகையை மதிக்கவேயில்லையாம்.

சீரழிந்த குடும்பம்: இப்போது நடிகையின் அம்மாவோ இறந்துவிட்டார். நடிகையின் சகோதரியும் உடல்நிலை முடியாமல் உள்ளார். தனது சகோதரியை கவனித்துக் கொள்ள முடியாமல் நடிகை திணறி வருகிறார். தன்னிடம் வாங்கிய நகைகளை கேட்டு பலமுறை முறையிட்டும் இயக்குநர் கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது. நடித்து குடும்பத்தை மேலே கொண்டு வரலாம் என தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த நடிகையின் வாழ்க்கை சீரழிந்தது மட்டும் இல்லாமல், அவரது குடும்பமும் அந்த இயக்குநரால் அவஸ்தைப்பட்டு வருவதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X