இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது.. வந்தா மலை போனா முடி.. மாஸ் நடிகருடன் மோதிப்பாக்க தமாஸ் நடிகர் ரெடி
சென்னை: இந்த நடிகர் தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் வந்து எதிர் நீச்சல் போட்டு தனக்கான மார்கெட்டை உருவாக்கிக் கொண்ட நடிகர்களில் இவரும் ஒரு ஹீரோ. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஒரு நல்ல படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையானது மாஸ் நடிகரின் ரசிகர்களால் சின்னாபின்னமாக மாறியது. படம் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதில் இந்த நடிகருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சங்கடம் என்றால், சம்பந்தப்பட்ட மாஸ் நடிகர் தனக்கு நெருக்கமானவர்களை வைத்தே இவரை காலி செய்தது தான். இப்படி இருக்கும்போது இந்த தமாஸ் நடிகர் எடுத்துள்ள ஒரு புதிய முடிவு தான் பலரது மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.
அதாவது இனி மாஸ் நடிகர், சீனியர் நடிகர் என்று எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தால் சரிபட்டு வராது. யாராக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என்றும், வந்தால் மலை போனால் முடி என்ற மன நிலைக்கு வந்துவிட்டாராம். அதனால் தான் அவரது அடுத்த படத்தின் புரோமோவில் அந்த மாஸ் நடிகரையும் அவரது அல்லு சில்லு ரசிகர்களையும் ஒரே போடாக போடுவது போல வசனங்களை வைத்தாராம் நடிகர்.

அட்டாக் டயலாக்ஸ்: முதலில் இந்த ஐடியா இயக்குநருக்கே இல்லையாம். அந்த இடத்திற்கு இயக்குநர் எழுதிய வசனம் வேறு ஒன்றாக இருந்துள்ளது. அப்படி இருக்கும்போது, நடிகர் தனது சமயோஜித புத்தியை பயன்படுத்தி மாஸ் நடிகருக்கு எதிராக திட்டமிட்டே வசனத்தை வைத்தாராம். நடிகர் இப்படியான முடிவை எடுக்க காரணம், என்னதான் அந்த மாஸ் நடிகர் இன்றைக்கு உச்சத்தில் இருந்தாலும், அவரின் ஆரம்ப காலம் அவரது அப்பாவால் அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
ஒரு கை பார்த்திட முடிவு: ஆனால் எனக்கு அப்படி இல்லை. நான் முழுக்க முழுக்க எனக்காக திரை வாழ்க்கையை பார்த்து பார்த்து கட்டமைத்து இருக்கிறேன். நான் உருவாக்கிய எனது சினிமா சாம்ராஜ்யத்திற்கே ஆபத்து வரும்போது எதிரில் இருப்பது யாராக இருந்தாலும் சரி ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறாராம் நடிகர். அதனால் தான் இப்படியான முடிவை அவர்கள் எடுத்தார்களாம்.


Click it and Unblock the Notifications











