இயக்குநரே இல்லாமல் நடக்கும் புரோமோஷன்.. சினிமாவில் நகரும் அரசியல் சதுரங்கம்.. திக் திக்னு படக்குழு!
சென்னை: சினிமாவும் அரசியலும் எப்போதுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று சொல்லப்படும். ஆனால், சமீப காலமாக அந்த தாக்கம் படத்தின் கதையைத் தாண்டி, புரோமோஷன் மேடை வரையிலும் வந்து விட்டதாக கோலிவுட்டில் புதிய பேச்சு கிளம்பியுள்ளது. குறிப்பாக, இந்த வாரம் வெளியாக உள்ள ஒரு பெரிய படத்தின் புரோமோஷனில் நடந்துவரும் ஒரு விஷயம், திரையுலகில் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
வழக்கமாக ஒரு படத்தின் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருக்கும் நபர்தான் அதிக உற்சாகத்துடன் ஒவ்வொரு புரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, படத்தைப் பற்றி பேசுவார். தொலைக்காட்சி நேர்காணல், யூடியூப் சேனல்கள், பத்திரிகையாளர் சந்திப்பு, ரசிகர்கள் சந்திப்பு என எங்குப் பார்த்தாலும் அவரே இருப்பார். ஆனால், தற்போது வெளியாக உள்ள இந்தப் படத்தில் நிலைமை முற்றிலும் தலைகீழாக இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் ஹீரோ, ஹீரோயின், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் தொடர்ந்து புரோமோஷனில் பங்கேற்று வருகிறார்களாம். ஒவ்வொரு நாளும் புதிய அப்டேட்டுகள் வெளியாகி, சமூக வலைதளங்களிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான அந்த முக்கிய நபர் மட்டும் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் முகம் காட்டவில்லை என்பதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
முதலில் இதை, "பின்னணி வேலைகளில் பிஸியாக இருப்பார்" என்று பலரும் நினைத்தார்களாம். ஆனால், படப்பணிகள் அனைத்தும் முடிந்து, ரிலீஸ் தேதி நெருங்கியும் அவர் தொடர்ந்து ஒதுங்கியே இருப்பதால், இதற்கு பின்னால் வேறு காரணம் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் முணுமுணுப்பு அதிகரித்துள்ளது.

அரசியல் நெருக்கம்: குறிப்பாக, அந்த இயக்குநருக்கு கடந்த சில ஆண்டுகளாக அரசியல் வட்டாரத்தில் இருந்த நெருக்கம்தான் இப்போது சிக்கலாக மாறியிருப்பதாக பேசப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவர் மேடைகளில் அதிகமாக தோன்றினால், சமூக வலைதளங்களில் தேவையில்லாத விவாதங்களும், ரசிகர்களின் ட்ரோல்களும் உருவாகலாம் என்ற கணக்குப் போட்டுதான், படக்குழுவே அவரை புரோமோஷனில் இருந்து விலக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் மீது எந்த அரசியல் சாயமும் விழக் கூடாது, படம் பற்றிய பேச்சுதான் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். "ஒருவரின் அரசியல் தொடர்பு பேசப்படுவதை விட, படம் பேசப்படட்டும்" என்பதுதான் படக்குழுவின் தற்போதைய யுக்தியாம்.
இதனால், இயக்குநர் இல்லாமலேயே படத்தின் புரோமோஷன் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை வெளியான பாடல்கள், டிரெய்லர், நடிகர்களின் பேட்டிகள் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படக்குழுவும் அமைதியாகவே தனது வேலையை செய்து வருகிறதாம்.
அமைதியே சிறந்த ஆயுதம்: ஒருபுறம் சினிமா, மறுபுறம் அரசியல் என இரண்டுக்கும் இடையே நகரும் இந்த நாசுக்கான சதுரங்க ஆட்டத்தில், ஒரு தவறான நகர்வு கூட படத்தின் வெளியீட்டை பாதிக்கக் கூடும் என்பதால், "அமைதியே சிறந்த ஆயுதம்" என்ற முடிவோடு சம்பந்தப்பட்டவர்கள் செயல்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. "திரையில் படம் ஓட வேண்டும்; சமூக வலைதளங்களில் அரசியல் ஓடக் கூடாது" என்பதுதான் அந்தப் படக்குழுவின் தற்போதைய மாஸ்டர் பிளான் என்றும் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications