எவ்வளவு சொல்லியும் திருந்தாத இயக்குநரின் மனைவி.. குடும்பம் சீரழிய அந்த பழக்கம் தான் காரணமா?

By Staff

சென்னை: இந்த இயக்குநர் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட இயக்குநர்களில் ஒருவர். படங்களில் நடிக்கவும் வந்து ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மனைவி, குழந்தைகள் என மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் இப்போது ஒரே ரணங்களாக ஓடிக் கொண்டு இருக்கிறதாம்.

அதாவது இயக்குநர் ஒரு காலத்தில் ஓவர் குடி பழக்கம் கொண்டவராம். குடிப்பழக்கம் மட்டும் இல்லாமல் புகைப்பழக்கம் என சில பல போதைப் பழக்கத்திற்கு பழக்கமானவர்தானாம். தனது மனைவியுடனே அவ்வப்போது அமர்ந்து மது அருந்தும் பழக்கமும் கொண்டவர். வீட்டில் எல்லா வகையான மதுவும் எப்போதும் ஸ்டாக் வைத்துக் கொண்டே இருப்பாராம். வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுபானக் கடைகளுக்கு இயக்குநர் அடிக்கடி சென்று ஸ்டாக் வாங்கிக் கொண்டே இருப்பாராம்.

இப்படி இருந்த இயக்குநர் ஒரு கட்டத்தில் இனிமேல் இந்த குடிப்பழக்கத்தையும் போதைப் பழக்கங்களையும் விட்டுவிட வேண்டும் என்று, முடிவெடுத்தாராம். அன்றில் இருந்து இந்த எல்லா பழக்கங்களையும் விட்டுவிட்டார். இப்படி இருக்கும்போது புருஷன் திருந்தினால், மாறினால் நமக்கு விருப்பப்பட்டதை நாம் ஏன் விட வேண்டும். நாம் ஒன்றும் அளவுக்கு அதிகமாக குடிப்பது இல்லையே, அப்படியே குடித்தாலும் வீட்டில் அமர்ந்து தானே குடிக்கிறோம் என்ற மன நிலையில் இருந்துள்ளார் இயக்குநரின் மனைவி.

Tamil Cinema Gossip Director Who Beeing Divorce Struggles Because Of His Wife Alcohol ADDICT

ஓவர் குடி: இப்படியான சூழலில், இயக்குநர் வீட்டில் இருக்கும்போது, இயக்குநரின் கண் முன்னே அமர்ந்து சரக்கை ஊற்றி, மிக்ஸிங் செய்து அனுபவித்துக் குடிக்கிறாராம். பல மாதங்களாக அமைதியாக இருந்த இயக்குநர், ஒரு கட்டத்தில் இப்படி என் கண் முன்னே குடிக்க வேண்டாம் அது எனக்கு மது அருந்தும் உணர்வைத் தூண்டும் விதமாக இருக்கிறது. எனவே என் கண் முன்னே குடிக்க வேண்டாம் என்று எல்லாம் தெரிவித்து கோரிக்கை வைத்துள்ளார்.

விவாகரத்து: இந்த கோரிக்கையை தனது மனைவி தெளிவாக இருக்கும் போது வைக்காமல் கொஞ்சம் அசகாய போதையில் இருக்கும் போது சொல்ல, மனைவிக்கு கோபம் பிச்சிக்கிட்டு வர வீட்டிற்குள் இருவருக்கும் அடிதடி ஏற்படாத குறைதானாம். போதை தெளிந்த பின்னரும் இயக்குநர் எடுத்துக் கூற, இதனால் மீண்டும் இருவருக்கும் இடையில் பிரச்னை ஆக, இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறதாம். இதைக் கேள்விப்பட்டவர்கள் வழக்கமான புருஷன் குடிக்கிறான் மனைவி அவஸ்தை படுகிறாள், என்றுதான் சொல்லுவார்கள், ஆனால் இங்கு மனைவி குடிக்கிறாள் கணவன் அவஸ்தை படுகிறான் என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X