இயக்குநர் கண் முன்னே உட்கார்ந்து ஊத்தி ஊத்தி குடித்த மனைவி.. மண்டை உடையும் அளவிற்கு வந்த பிரச்னை!

By Staff

சென்னை: இந்த இயக்குநர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவரது இயக்கத்தில் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையும் அத்துடன் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு விடுகிறது. இப்படி இருக்கையில் இந்த இயக்குநரின் வாழ்க்கையில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சினிமா பின்புல குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் இந்த இயக்குநரைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான். பல ஸ்டீரியோ டைப்களை உடைத்த இயக்குநர். இவரது படத்தால் சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், தனது கதை சொல்லில் மிகவும் உறுதியாக இருந்த இயக்குநர் என்று பெயர் பெற்றவர் இவர்.

தனது படத்தில் நடித்த நடிகையை முதல் திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் வாழ்ந்தார், அதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின்னர் இயக்குநர் மற்றும் ஆடை வடிவமைப்பாளரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.

Tamil cinema gossip director Who Heading For Divorce Because Of His Wife Drinking Habit

மனைவியால் வந்த பிரச்னை: இயக்குநர் ஓவர் போதை, புகை பழக்கம் கொண்டவர். இப்படி இருக்கையில், ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் எல்லாம் வேண்டாம் என்று அதில் இருந்து வெளியேற முடிவு செய்து, அவற்றை எல்லாம் விட்டுவிட்டு இருந்துள்ளார். ஆனால் இவர் போதை பழக்கத்தில் இருந்த போது அவரது மனைவியுடன் அமர்ந்து நன்றாக குடிப்பாராம். இப்போது இவர் விட்டுவிட்டதால் அவர் மனைவியும் விட்டுவிட வேண்டும் என்று கணக்குப் போட்டுள்ளார். ஆனால் அவர் மனைவியோ இவரைப் போல குடித்துவிட்டு போதையில் தள்ளாடாமல் எப்போதும் ஒரு லெவலாகவே இருந்து வருபவர்.

விவாகரத்து : இப்படி இருக்கும்போது, ஒரு முறை இயக்குநர் கண் முன்னே அமர்ந்து, அவரது மனைவி ஊத்தி குடித்துக் கொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்த இயக்குநரோ, நானே குடிப்பதை விட்டுவிட்டேன், என் கண் முன் அமர்ந்து நீ குடிப்பது என்னை மீண்டும் அந்த குடிப்பழக்கத்திற்கு தூண்டுவது போல உள்ளது என்று பேசியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ நான் குடிப்பது எனது விருப்பம் என்று பேச, இருவருக்கும் இடையில் பெரிய பிரச்னையே ஏற்பட்டு இப்போது விவாகரத்து வரைக்கும் வந்து நிற்கிறதாம். சும்மாவா சொன்னார்கள் குடி குடியைக் கெடுக்கும் என்று!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X