போயும் போயும் உனக்கு அந்த நடிகையா கிடச்சா? இயக்குநரை வெளுத்து வாங்கிய மனைவி.. நல்ல குடும்பம்டா!
சென்னை: இந்த இயக்குநர் குறித்து ஆஃப் த ரெகார்டில் பல விஷயங்கள் இப்போதும் உலா வருகின்றது. இதெல்லாம் போதாது என அவரும் அவ்வப்போது எங்காவது வாய் கொடுத்து சிக்கிக் கொள்கின்றார். இப்படி இருக்கும்போது, இயக்குநர் ஒரு காலத்தில் ஒரு நடிகையுடன் செம க்ளோஸாக இருந்துள்ளார். திருமணம் செய்து கொள்கின்றேன் எனக் கூறி நடிகையை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் இது தொடர்பாக தெரிந்து கொண்ட இயக்குநரின் மனைவி, இயக்குநரை, போயும் போயும் உனக்கு அந்த நடிகையா கிடச்சா என கடிந்துள்ளார். இதைக் கேள்விப்பட்டவர்கள் நல்ல குடும்பம்டா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த இயக்குநர் வெகு சில படங்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதன் பின்னர் சினிமாவை விட மற்றொரு தொழிலில் அதிக பணம் வருகின்றது என தனது தொழிலை மாற்றிக் கொண்டார். ஆனால் சினிமாவில் இவர் இருந்த காலகட்டத்தில் பல நடிகைளை தனது வலையில் வீழ்த்தியுள்ளார். இதில் பல நடிகைகள் இயக்குநருடன் ஒரே ஒரு இரவு நேர பார்ட்டியை மட்டும் அட்டன் செய்துவிட்டு, அவர் இருக்கும் திசை பக்கமே திரும்பிப் பார்க்காமல் இருந்துள்ளனர். ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் இயக்குநரின் வலையில் சிக்கிக் கொள்ள, இயக்குநர் அந்த நடிகையை தனது ஆசைக்கு இணங்க வைத்தது மட்டும் இல்லாமல், நடிகை மூலம் எவ்வளவு பணத்தை கறக்க முடியுமோ அவ்வளவு பணத்தை கறந்துள்ளார்.

இதெல்லாம் தெரியாத நடிகை, இயக்குநர் கூறிய அனைத்தையும் கேட்டு, பணம், பொருள் மட்டும் இல்லாமல் இயக்குநர் கேட்டபோதெல்லாம் தன்னையும் ஏமார்ந்து கொடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் நடிகை இயக்குநருக்கு போர் அடிக்க, நடிகையை கொஞ்சம் கொஞ்சமாக கலட்டிவிட்டுள்ளார். மேலும் அந்த காலகட்டத்தில் சினிமாவை விடவும், மற்றொரு தொழிலில் அதிக லாபம் என அதில் கவனம் செலுத்தியுள்ளார். அது அவருக்கு நன்றாகவே கை கொடுக்க, இயக்குநர் மாற்று தொழிலில் இன்றைக்கு குறிப்பிட்ட அளவில் வளர்ச்சியும் பெற்றுள்ளார்.
மிரட்டல்: அதன் பின்னர் திருமணம், குழந்தைகள் என தான் உண்டு தன் வேலை உண்டு, குடும்பம் உண்டு என இருந்த இயக்குநருக்கு இப்போது குடைச்சல் தொடங்கிவிட்டதாம். அதாவது நடிகை இயக்குநரின் மனைவிக்கு நேரடியாக போன் செய்து விபரங்களைக் கூறியுள்ளார். ஆனால் முதலில் இயக்குநரைத் தொடர்புகொண்டு உன்னால்தான் எனது வாழ்க்கை, சீரழிந்து விட்டது. எனவே, எனக்கு ஒரு வழியைச் சொல் இல்லை என்றால், நாம் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை, உனது மனைவிக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
நல்ல குடும்பம்: நடிகையின் மிரட்டலைக் கண்டுகொள்ளாத இயக்குநர், நடிகையை புறக்கணித்து வந்துள்ளார். எனவே நடிகை, இயக்குநரின் மனைவிக்கு போனைப் போட்டு பேசியுள்ளார். இதுமட்டும் இல்லாமல், மகிழ்ச்சியாக இருந்தபோது எடுத்த வீடியோக்களில் சிலவற்றையும் அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்த இயக்குநரின் மனைவி, ஆத்திரப்பட்டு, இயக்குநரை நோக்கி, உன்னோட ஆசையைப் போக்க இந்த நடிகையா கிடைத்தா? அந்த நடிகையை முயற்சி செய்து பார்த்திருக்கலாம்தானே? எனக் கேட்டுள்ளார். மனைவியின் ரியாக்ஷன் இப்படி இருக்கும் என இயக்குநர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லையாம். இந்த விசயத்தை கேள்விப்பட்டவர்கள் நல்ல குடும்பம்டா என கமெண்ட் அடித்து வருகின்றார்களாம்.


Click it and Unblock the Notifications











