ஷூட்டிங் ஸ்பாட்டில் மோதல்: அந்த 'ஆல்-ரவுண்டர்' நடிகருக்கு செக் வைத்த 'மெகா' நடிகர்!

By Staff

சென்னை: தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமா எனத் தென்னிந்தியத் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் அந்தப் பிரம்மாண்டமான படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிப்பில் 'ஆல்-ரவுண்டர்' எனப் பெயரெடுத்த அந்தத் தமிழ் நடிகரும், பல மொழிகளில் நடித்து 'மெகா ஸ்டார்' எனப் பெயரெடுத்த அந்தப் பக்கத்து மாநிலத்து மூத்த நடிகரும் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இரண்டு ஜாம்பவான்கள் ஒரே திரையில் தோன்றுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே விண்ணைத் தொட்டுள்ளது. இப்படி இருக்கையில், படப்பிடிப்புத் தளத்தில் இவர்களுக்கு இடையே ஒரு 'வசனப் போர்' வெடித்ததாக ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறி உள்ளது.

அதாவது, அந்தத் தமிழ் நடிகர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், திரைக்குப் பின்னால் கதை, திரைக்கதை எனப் பல வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்பவர். ஒரு முக்கியமான காட்சியைப் படமாக்கும் போது, தனது கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் 'வெயிட்டேஜ்' கொடுக்கும் வகையில் சில அதிரடி வசனங்களை மாற்றி எழுதிக் கொடுத்துள்ளார். இயக்குநரும் அந்தத் தமிழ் நடிகரின் திரை அறிவு மீதுள்ள நம்பிக்கையில், வசனங்களை மாற்றி அந்தச் சீனியர் நடிகரிடம் கொடுத்துள்ளார்.

Tamil Cinema Gossip Ego Clash Between Two Heros at Shooting Spot

பில்டப் எல்லாம் வேண்டாம்: அந்தப் புதிய வசனங்களைப் பார்த்த அந்த 'மெகா' நடிகர், ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, "வசனங்கள் ஏற்கனவே இருந்தது போலவே இருக்கட்டும். தேவையில்லாமல் ஹீரோயிசம் சேர்க்க வேண்டாம்" எனத் தனது பாணியில் கறாராகச் சொல்லிவிட்டாராம். அதாவது, "காட்சியின் ஆழம் முக்கியமா? இல்லை தனி நபர் பில்டப் முக்கியமா?" என்கிற ரீதியில் அவர் கேட்ட கேள்வி படப்பிடிப்புத் தளத்தில் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.

ஈகோ பிரச்னை: இதனால் அந்தத் தமிழ் நடிகர் சற்று அப்செட் ஆகிவிட்டாராம். தனது திறமையைப் பயன்படுத்திச் சீனை மெருகேற்ற நினைத்தால், அதை அந்தச் சீனியர் நடிகர் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்துவிட்டாரே என்ற வருத்தம் அவருக்குள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த படக்குழுவினர், "இரண்டு பேருமே நடிப்பில் ஜாம்பவான்கள் தான், ஒரு சின்ன வசன மாற்றத்திற்காக இப்படிப் பனிப்போரில் ஈடுபடுகிறார்களே" என ஆச்சரியத்துடன் பேசிக் கொள்கிறார்கள்.

சாமாதனப் புறா: இருந்தாலும், அந்தச் சீனியர் நடிகர் தனது அனுபவத்தின் அடிப்படையில் எடுத்த முடிவில் மிகவும் உறுதியாக இருந்ததால், கடைசியில் இயக்குநரே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினாராம். இந்தச் சம்பவம் காரணமாக அன்றைய நாள் படப்பிடிப்பு சில மணி நேரம் தள்ளிப் போனதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது சினிமா வட்டாரத்தில் செம வைரலாகப் பரவி வருகிறது. பலரும் "இருவருமே திறமையானவர்கள் தான், இது ஆரோக்கியமான விவாதமாகத் தான் இருக்கும்" என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X