கல்லையே கரைத்த நடிகர்.. இத்தனை வருட அனுபவத்தை வெச்சுக்கிட்டு இதுகூட செய்யலனா எப்படி?
சென்னை: ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் எத்தனை டேக் வேண்டுமானாலும் வாங்குவார். முழு திருப்தி கிடைக்கும் வரை ஷூட்டிங்கை நிறுத்த மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சீரியஸாகவே இருப்பார். இப்படித்தான் அந்த தேசிய விருது இயக்குநரை இதுவரை கோலிவுட் பார்த்து வந்தது. ஆனால், தற்போது அவர் இயக்கி வரும் புதிய படத்தின் செட்டில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.
சமீபத்தில் முடிந்த பெரிய ஷெட்யூல் முழுவதும் அந்த இயக்குநர் சிரித்த முகத்துடனும், ஜாலியாகவும் இருந்ததாக படக்குழுவினரே ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்களாம். இதற்கு முன்பு அவருடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் கூட, "இவ்வளவு ரிலாக்ஸாக அவரை பார்த்ததே இல்லை" என்று கூறியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இதற்குக் காரணம் என்ன என்று விசாரித்தால், படத்தின் ஹீரோதான் என்று சொல்கிறார்களாம். காட்சியை ஒருமுறை விளக்கினால் போதும். அதற்கு முன், பின் வரும் காட்சிகளின் உணர்வை முழுமையாக புரிந்து கொண்டு, பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கிலேயே முடித்துக் கொடுத்து வருகிறாராம். அதனால் இயக்குநரின் வேலை பாதியாக குறைந்துவிட்டதாம்.

பகல், இரவு பாராமல் தொடர்ந்து நடைபெறும் படப்பிடிப்பிலும் நேரம் தவறாமல் கலந்து கொண்டு, இயக்குநர் கேட்பதை அப்படியே திரையில் கொண்டு வர அந்த ஹீரோ காட்டும் அர்ப்பணிப்பு, மொத்த படக்குழுவையும் ஆச்சரியப்பட வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பும் திட்டமிட்ட வேகத்தில் நகர்ந்து வருகிறதாம்.
இந்த தகவலை சமீபத்தில் பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவரும் தனது வீடியோவில் பகிர்ந்திருந்தார். அதேபோல், படத்தின் தயாரிப்பாளரும் அந்த ஹீரோவை "சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்" என்று வெளிப்படையாக பாராட்டியிருப்பதும் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதுமே, அந்த நடிகரின் ரசிகர்கள் வழக்கம்போல் காலரைத் தூக்கிவிட்டுள்ளனர். "திறமைக்கு சரியான இயக்குநர் கிடைத்தா இதுதான் ரிசல்ட்", "ஆக்ரோஷ இயக்குநரையே சிரிக்க வைத்திருக்கிறார் என்றால், படத்தில் என்ன செய்திருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்", "இப்போதுதான் தலைவனோட முழு திறமை வெளியில் வர ஆரம்பிச்சிருக்கு" என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications