உச்ச நடிகர்களை நம்பி எல்லாம் ஊத்திக்கிச்சு.. கடனில் மூழ்கிய தயாரிப்பு நிறுவனம்!

By Staff

சென்னை : தமிழ் சினிமாவில் நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் என பலருக்கும் ஒரு படம் தோல்வி அடைந்தால் அதனால் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால் ஒரு படம் தோல்வியைச் சந்தித்தால் அதனால் ஏற்படும் நஷ்டத்தை எதிர்கொள்பவர் தயாரிப்பாளர் மட்டுமே. அப்படி தமிழ் சினிமாவில் நஷ்டத்தை எதிர்கொண்டு இருந்த வீட்டை விட்டு நடுத்தெருவுக்கு சென்ற பல தயாரிப்பாளர்கள் உள்ளார்கள். கடந்த சில இரண்டு நாட்களாக கூட புகழ் பெற்ற மூத்த நடிகர் ஒருவரின் பேரன் படம் தயாரிக்கிறேன் என வீட்டையே இழக்கும் நிலைக்கு வந்துள்ளார். இப்படியான நிலையில் உச்ச நடிகர்களை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பு நிறுவனம் இப்போது கடனில் மூழ்கி வருகிறது.

இந்த தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைக்கும் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உச்ச நடிகராக இருந்த ஒரு நடிகரை வைத்து படம் எடுத்தார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தயாரிப்பு நிறுவனத்தின் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களும் தவிடு பொடி ஆனது. தயாரிப்பு நிறுவனம் பல ஆயிரம் கோடிகளை தமிழ் சினிமாவில் கொட்டியுள்ளது. ஒருகாலத்தில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே, மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய யோசிப்பார்கள். காரணம் அந்த அளவிற்கு இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பாடங்களின் தரம் இருந்தது.

Gossip tamil cinema Gossip cinema Gossip
கடன்: ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தயார் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. இப்படியான நிலையில் தயாரிப்பு நிறுவனம் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட பெரிய நடிகர்கள் பெரிய இயக்குனர்களை வைத்து படங்களை எடுக்க முடிவு செய்தார்கள். இதனால் தயாரிப்பு நிறுவனம் பல இடங்களில் கடன்களை பல நூறு கோடிகளில் வாங்கி படங்களை தயாரித்தது.

வட்டி: சில படங்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெளியானாலும் அந்த படங்களின் வசூல் அந்த படங்களின் தயாரிப்பு செலவுக்கு சரியாக போனது. இதனால் அது போன்ற படங்களினால் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் பெரிய நடிகர்கள் பெரிய இயக்குனர்களை வைத்து தயாரித்த படங்கள் குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாததால், வாங்கிய கடனுக்கு பல நூறு கோடிகளில் வட்டி கட்டியது தயாரிப்பு நிறுவனம்.

பில்டப்: ஒரு சில படங்களுக்கு எல்லாம் பெரிய அளவில் பில்டப் கொடுத்து படத்தின் தயாரிப்புகளை செய்த நிறுவனத்திற்கு பெரும் அடிதான் காத்து இருந்தது. இதனால் படக்குழு பெரும் கடனில் மூழ்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மட்டும் படக்குழு தயாரித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக்கிச்சு என்று தான் கூறுகிறது சினிமா வட்டாரம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் இப்போது பெரும் கடனில் மூழ்கி வருகிறது. பெரிய பெரிய நடிகர்கள் எனச் சொல்லுகிறார்கள், இயக்குநர்கள் எனக் கூறுகின்றார்கள், பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்கிறார் ஆனால் யாருடைய படமுமே ஓடவில்லையே என தயாரிப்பு நிறுவனத்திற்குள் பேசிக்கொள்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X