மகனுக்காக தரை லெவலுக்கு இறங்கி முட்டுக் கொடுக்கும் அப்பா.. பார்க்கவே பரிதாபமாக இருக்குனு பேச்சு!
சென்னை: பொதுவாகவே மகன்களுக்கு அப்பாக்கள் சப்போர்ட் செய்வது என்பது தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற சொலவடைக்கு சாலப் பொருந்தும் எடுத்துக் காட்டு. அப்படி தனது நடிகர் மகனுக்காக இயக்குநர் அப்பா ரொம்பவும் தர லெவலுக்கு இறங்கி முட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது இந்த நடிகரை சினிமாவிற்குள் அறிமுகம் செய்து வைத்து அவரது ஆரம்பகால பெரும்பான்மையான படங்களை நடிகரின் அப்பாவே இயக்கி, தயாரித்தார். இதில் விஷயம் என்னவென்றால் மகனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க தனது சொத்துக்களை பாதிக்கும் மேல் விற்று, மகனுக்காக செய்தார். ஆனாலும் மகனின் ஆரம்ப காலம் செல்ஃப் எடுக்காத வண்டி போலவே இருந்தது. ஒரு கட்டத்தில் இயக்குநர் அப்பாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நடிகருடன் இணைந்து நடிக்க வைத்து, பெருவாரியான மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார் நடிகர்.

இயக்குநர் அப்பா: அதன் பின்னர் நடிகர் கொஞ்சம் கொஞ்சமாக திரை வாழ்க்கையில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டார். அதிலும் நடிகரின் அப்பாவின் பங்கு பெருமளவுக்கு இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இப்படி இருக்கையில் நடிகர் தனக்கு நன்கு தெரிந்த நடிகர் தொழிலை விட்டுவிட்டு வேறு ஒரு ரூட்டில் வண்டியை திருப்பி உள்ளார்.
கடுமையான விமர்சனங்கள்: நடிகர் ஏதோ ஒரு புள்ளியில் வண்டியை அப்படித்திருப்புவார் என்ற பேச்சுக்கள் நீண்டகாலமாகவே அடிபட்டு வந்த நிலையில் நடிகர் இந்த முடிவு எடுத்தது பெரிய சர்ப்ரைஸைக் கொடுக்கவில்லை. ஆனால் ரூட்டை மாற்றிய பின்னர் தான் தேர்ந்தெடுத்த பாதைக்கு தன்னை அவர் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளாதது பெரும் பேசு பொருளாகவே மாறி வருகிறது.
ஓவர் முட்டு: இன்னும் சொல்லபோனால் நடிகரின் நடவடிக்கைகளை ஏதோ, செத்தவன் கைகளில் வெத்தலை பாக்கு கொடுத்தது போல இருக்கிறது என்று கடுமையாக விமர்சிப்பவர்களையும் பார்த்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் நடிகரின் அப்பாவோ, தனது மகனின் இந்த நிலை குறித்து முன்னர் வேதனைப்பட்டாலும், சமீப காலமாக ரொம்பவே முட்டுக் கொடுத்து வருகிறார் என்ற விமர்சனங்கள் எழும் அளவுக்கு முட்டுக் கொடுக்கும் அளவுக்கு ஆளாகிவிட்டாரே என்று இயக்குநரைப் பார்த்து உச்சுக் கொட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











