மகனை வைத்து அப்பாவை முடக்க பிளான்.. நடிகர் நல்லவே மாட்டிக்கிட்டாரு போல.. பெண் பிரபலம் தடாலடி!

By Staff

சென்னை: இந்த நடிகர் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவர்தான். சினிமா மட்டும் இல்லாமல், சின்னத்திரை அதோடு வேறு ஒரு பிசினஸ் என கோடிகளில் விளையாடும் நடிகர் தான். ஆனால் நடிகர் இப்போது திருடனுக்கு தேள் கொட்டியது போல ஒரு சிக்கலில் சிக்கி விட்டாராம். இதில் என்ன சிக்கல் என்றால் அவரது மகனை வைத்தே நடிகரை மடக்க, பெண் பிரபலம் உறுதியாக இருக்கிறாரா என்பதுதானாம்.

இந்த நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவருக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். அவரது திருமணம் சொந்தத்தில் தனது பெற்றோர்கள் சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. என்னதான் இரண்டு குழந்தைகளுக்கு அவர் அப்பா என்றாலும் பெரிய அளவில் தனது இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் தான் இருந்துள்ளார். இப்படி இருக்கும்போது, தனது வேலை விஷயமாக தனது குடும்பத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர் செல்வது, வெளிநாடு செல்வது என்று இருந்தது, இல்லற வாழ்க்கை மீதான விருப்பமின்மையை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

Tamil Cinema Gossip Female Celebrity Who Fight For Her New Born Son With Very Famous Actor

பெண் பிரபலமும் நடிகரும்: இப்படி இருக்கும்போது அவர் அந்த பெண் பிரபலத்தை சந்தித்தார். அவரும் ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனுக்கு அம்மா. இது மட்டும் இல்லாமல் விவாகரத்து பெற்றவர். இப்படி இருக்கும்போது, இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம், நெருக்கமான பழக்கமாக மாற, இருவரும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை வாழத் தொடங்கி விட்டார்கள். இப்படி இருக்கும்போது, பெண் பிரபலம் கர்ப்பமாக, நடிகர் இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லையே என்று அதிர்ந்து போயுள்ளார்.

ம்கனை வைத்து: இருவரும் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், நடிகர் இந்த கூத்து முதல் மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் தெரியவர, நடிகர் இப்போது அந்த பெண் பிரபலத்தை கழட்டி விட்டுவிட்டு, முதல் மனைவியுடன் சென்றுவிட்டாராம். இப்படி இருக்கும்போது அந்த பெண் பிரபலத்து ஆண் குழந்தை பிறக்கவே, அந்த குழந்தைக்கு அப்பா நடிகர் தான் என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறாராம். ஆனால் நடிகரோ நான் அந்த குழந்தைக்கு அப்பா இல்லை, டி.என்.ஏ டெஸ்ட்டுக்கும் வேண்டுமானால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு நடிகர் ஆளையே காணவில்லை என்று அந்த பெண் பிரபலம் தொடர்ந்து சொல்லி வருகிறாராம். நடிகரின் மகனை வைத்தே நடிகருக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளாராம் அந்த பெண் பிரபலம் என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X