அந்த காரணத்துக்காக ஆண் பிரபலத்துடன் ஒட்டிக் கொண்ட பெரிய இடத்துப் பெண்.. நல்லா ருசி கண்டுவிட்டாராம்
சென்னை: நடிகர்களும் நடிகைகளும் தான் மாறி மாறி ஒட்டிக் கொண்டு திரையுலகில் டிராவல் செய்வார்கள் என்று பார்த்தால், இந்த பெரிய இடத்து பெண்ணும் அந்த ஆண் பிரபலமும் திரைக்கு பின்னால் இணைந்து கொண்டு நீண்ட ஆண்டுகளுக்கு பயணிக்க முடிவு எடுத்துள்ளார்களாம்.
அதுவும் திரையில் தோன்றும் நடிகரும் நடிகையும் தங்களது கெமிஸ்ட்ரி மக்களுக்குப் பிடித்திருந்தாலும் சரி, வெற்றியை கொடுத்தாலும் சரி, கதை இருக்கிறதோ இல்லையோ எப்படியும் இரண்டு மூன்று படங்களில் இணைந்து பணியாற்றி விடுவார்கள். அப்படி இருக்கும்போது, இந்த பெரிய இடத்து பெண்ணும் ஆண் பிரபலமும் இணைந்து பயணிக்கலாம் என்று முடிவு எடுத்ததற்கு முக்கிய காரணமே வெற்றிதான் என்று கூறப்படுகிறது.
இந்த பெரிய இடத்து பெண் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் தனது வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார். ஆண்கள் நிறைந்த குறிப்பாக ஆணாதிக்கம் நிறைந்த இந்த திரைத்துறையில் ஒரு பெண்ணாக வெற்றியை ஈட்டுவது என்பது ஏதோ சாதாரண விஷயம் இல்லை. அப்படி இருக்கும்போது அவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த காலத்தில் இருந்தே, தனது வெற்றிக்காக நம்பிக்கையுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துள்ளார்.

வெற்றிக்காக: தமிழ் சினிமாவின் டாப்பில் இருக்க கூடிய அவரது அப்பாவை வைத்தும் ஏதேதோ முயற்சி செய்து பார்த்துவிட்டார். ஆனால் அது எல்லாம் கொஞ்சம் கூட கை கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தரமான கதைகளை தேர்வு செய்து, அவற்றை படமாக தயாரித்து வெற்றிகளை அடுக்கி வருகிறது சில நிறுவனங்கள்.
தூதுவிட்ட பெண் பிரபலம்: அதில் சில நிறுவனங்களுக்கு இந்த பெண் பிரபலத்தின் தரப்பில் இருந்து தூதுவிடப்பட்டுள்ளது. இதை சிலர் நிராகரிக்க, ஒருவர் மட்டும் சரி என்று அழைப்பை ஏற்றுக் கொண்டு அந்த பெரிய இடத்து பெண் பிரபலத்தை சந்தித்துள்ளார். அவர்களது சந்திப்பில் இருவரும் இணைந்து படம் தயாரிக்கலாம் என்று பெண் பிரபலம் கூறியுள்ளார். இந்த ஆண் தயாரிப்பாளரோ, நமது படங்களின் புரோமோஷனுக்கு இந்த பெண் பிரபலத்தின் அப்பாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வியாபாரச் சிந்தனையுடன் ஓ.கே சொல்லி உள்ளார்.
முக்கிய முடிவு: இருவரும் இணைந்து தயாரித்த முதல் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைக் கொடுக்க தனது பல ஆண்டு கால திரை வாழ்க்கையில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார் அந்த பெரிய இடத்துப் பெண். இதனால் எதிர்காலத்திலும் அந்த ஆண் தயாரிப்பாளருடன் இணைந்து கொண்டு படங்கள் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் ஆண் தயாரிப்பாளருடன் ஒரு நல்ல சகோதரன் உணர்வு கிடைக்கிறது என்றும் மகிழ்ச்சியில் உள்ளாராம் பெரிய இடத்து பெண் பிரபலம்.


Click it and Unblock the Notifications











