படம் ரிலீஸில் பெரிய பிரச்னை.. தயாரிப்பாளரால் இயக்குநர் கணவருக்கும் நம்பர் நடிகைக்கும் சண்டை?

By Staff

சென்னை: இந்த இயக்குநர் இயக்கத்தில் படம் வெளியாகி ரொம்ப வருசம் ஆகிவிட்டதே என்ற எண்ணம் ரசிகர்களுக்கு எழுந்துவிட்டது. இயக்குநரும் தனது இயக்கத்தில் படத்தை எடுத்து முடித்துவிட்டு ரிலீஸ்க்காக கடந்த ஆண்டில் இருந்தே காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னைகள் தான் என்றும் கூறப்படுகிறது.

இதில் மேலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், இயக்குநரின் அலட்சியத்தால் படத்திற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து கூடுதலாக செல்வானதால் தயாரிப்பாளர் செம அப்செட்டில் இயக்குநரை லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டாராம். இதனால் இயக்குநரின் மனைவியே படத்தின் மீதி செலவை ஏற்றுக் கொள்வதாக முடிவெடுத்து படத்தின் இணை தயாரிப்பாளராக முடிவெடுத்தார் என்று கூறப்படுகிறது.

இப்படி இருக்கும்போது படத்தை ஒருவழியாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்துவிட்டார்களாம். இது ஒரு வகையில் இயக்குநருக்கு சந்தோஷமாக இருந்தாலும் இதனால் இயக்குநருக்கும் அவரது நடிகை மனைவிக்கும் பிரச்னையை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Tamil Cinema Gossip Fight Between Actress Wife And Director Husband Because OF Movie Release Date

திட்டு வாங்கிய இயக்குநர்: அதாவது இயக்குநரின் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஒரு தேதியை முடிவு செய்துள்ளார். ஆனால் அந்த தேதியில் நடிகை நடித்த ஒரு பான் இந்தியா படம் வெளியாகிறதாம். எனவே அந்த படக்குழு நடிகை இருப்பதால் தமிழ்நாட்டு ரசிகர்களை கனெக்ட் செய்ய சரியாக இருக்கும் என்றுதான் நடிகையை கமிட் செய்துள்ளார்கள். ஆனால் இப்போது நடிகை இணை தயாரிப்பாளராக உள்ள படத்தை தனது படத்துக்கு எதிராக ரிலீஸ் செய்ய வேண்டிய சூழலை உருவாக்கி உள்ளதால், நடிகை தனது இயக்குநர் கணவரிடம் செம டென்ஷன் ஆகி திட்டிவிட்டாராம்.

புருஷன் பொண்டாட்டி சண்டை: மனைவியிடம் வாங்கிய திட்டுடன் தயாரிப்பாளரைச் சந்தித்து படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரம் மட்டும் தள்ளி வைத்துக் கொள்ளலாமே என்று கேட்டுள்ளாராம். ஆனால் தயாரிப்பாளரோ, அதெல்லாம் முடியாது என்று மிகவும் ஸ்ட்ரிக்டாக கூறி உள்ளாராம். இதனால் இயக்குநரோ என்ன செய்வது என்று தெரியாமல் குழப்ப மனநிலையில் இருக்கிறாராம் இயக்குநர். ஆனால் மனைவியை காம்ப்ரமைஸ் செய்வது கஷ்டம் என்பதால் இயக்குநரை காம்பர்மைஸ் செய்ய முழு மூச்சுடன் களமிறங்கி உள்ளாராம் இயக்குநர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X