ரசிகர்களை தயாராக இருக்கச் சொன்ன நடிகர்.. சீக்கிரமே உதயமாகிறதா இன்னொரு நடிகர் கட்சி?

சென்னை: சினிமாவில் அடுத்த படத்தை விட, அரசியலில் அடுத்த நகர்வுக்கான வேலைகள்தான் அமைதியாக நடந்து வருகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு முன்னணி நடிகரின் சமீபத்திய நடவடிக்கைகள் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு தனது ரசிகர்களை நேரில் சந்தித்து, "இனிமேல் நாம் எடுக்கப்போகும் முடிவுகள் சாதாரண முடிவுகள் இல்லை. அது நெத்தியடி முடிவுகள். தவறுக்கு வழிவகுக்கும் முடிவுகள் கிடையாது" என்று உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார். அந்த பேச்சைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும், சினிமா வட்டாரத்தில் அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடிகருக்கு அரசியல் மீது ஆசை புதிதல்ல என்கிறார்கள். இதற்கு முன்பும் தேர்தல்களில் போட்டியிட முயற்சித்தது, பல்வேறு சங்கத் தேர்தல்களில் தீவிரமாக செயல்பட்டது, பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில அரசியல் பாணி நடவடிக்கைகளில் ஈடுபட்டது என நீண்ட பட்டியலே இருக்கிறது. அதனால், ரசிகர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி சாதாரண சந்திப்பு இல்லை என்றே பலரும் பேசுகின்றனர்.

Tamil cinema Gossip Leading Actor s Political Moves Spark Buzz Fans Meeting Fuels Alliance Speculation

இதற்கிடையில், தற்போது ஆட்சியில் இருக்கும் நடிகரின் அரசியல் எழுச்சிக்குப் பிறகு, தனியாக கட்சி தொடங்கி களம் காண்பதை விட, சரியான நேரத்தில் கூட்டணி அரசியலில் இணைவதே பாதுகாப்பான முடிவு என்ற கணக்கில் இந்த நடிகர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படிச் செய்தால் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலோ, இடைத்தேர்தலோ அல்லது அடுத்த சட்டமன்றத் தேர்தலோ என ஏதாவது ஒரு கட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. அல்லது அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு கிடைக்கலாம் என்பதே அவரது அரசியல் திட்டம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

இலக்குக்கு தயாராகச் சொன்ன நடிகர்: சினிமா உலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களுக்கு இன்று அதிகாரப் பதவிகளும் அமைச்சரவை வாய்ப்புகளும் கிடைத்திருப்பதை பார்த்த பிறகுதான் இந்த நடிகரின் அரசியல் ஆர்வம் இன்னும் அதிகரித்திருக்கிறது என்றும் சிலர் பேசுகிறார்கள். "தனியாக போராடுவதை விட சரியான கூட்டணியில் இருந்தால் இலக்கு எளிதாக அடையலாம்" என்ற கணக்கே தற்போது ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பரபரப்பு: இதெல்லாம் வெறும் யூகமா? அல்லது உண்மையிலேயே ரசிகர்களை தயார்படுத்தும் முதல் கட்ட வேலையா? என்பதற்கான பதில் விரைவில் வெளியாகும் அரசியல் நகர்வுகளில்தான் இருக்கிறது என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X