மாஸ் நடிகரின் படத்துக்கு மட்டுமல்ல.. ஆட்சி அமைக்கவும் முட்டுக்கட்டை போடும் பெரும் புள்ளி

By Staff

சென்னை: மாஸ் நடிகருக்கு எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் பிரச்னை தானாகவே வந்து ஒட்டிக் கொள்கிறது. அவரைச் சீண்டி சீண்டி தான் அரசியல் தளத்தில் இவ்வளவு பெரிய சக்தியாக மாற்றி இருக்கிறார்கள் என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், அவரது படத்தை ரிலீஸ் செய்வதற்கு இடையூறு செய்வதை போலவே, ஆட்சி அமைப்பதிலும் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறாராம் அந்த மேலிடத்து பெரும் புள்ளி.

அதாவது நடிகரின் படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டியது. ஆனால் தேவையில்லாமல், அதில் தலையை விட்டு, நடிகரை எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துப் பார்த்தனர். இது மட்டும் இல்லாமல், நடிகரின் மீது உள்ள புகார் ஒன்றின் மீதான விசாரணை ஒன்றுக்காக அடிக்கடி தமிழ்நாட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டி இருந்ததால், அங்கேயும் நடிகரை காம்ப்ரமைஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நடிகர் அதற்கு எல்லாம் கொஞ்சம் கூட அடிபணியவில்லை.

Tamil Cinema Gossip Mass Actor facing Political Pressure From Political Icon

அரசியல் நெருக்கடி: அதனால் தான் நடிகரின் படத்தை வெளியிடுவதில் பெரும் சிக்கலை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இப்படி இருக்கையில் தற்போதைய மாஸ் நடிகர் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தயாராகி வருகிறார். அப்படி இருக்கையில் அவருக்கு வேண்டிய பெரும்பான்மை இல்லாததால், மாஸ் நடிகர் ஆட்சி அமைக்கவும் அந்த மேலிடத்து பெரும் புள்ளி இடையூறு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், மாநிலத்தில் உள்ள ஆண்ட கட்சிகள் இரண்டு இணைந்து நடிகரை வீழ்த்த திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்ற புரளியையும் அந்த மேலிடத்து பெரும் புள்ளி தான் பரப்பி வருகிறாராம்.

தவிடு பொடி: இப்படி இருக்கையில் மாஸ் நடிகர் எதற்கும் அசையாமல், தனது அரசியல் வளர்ச்சியிலும் ஆட்சி அமைப்பதிலும் கூடுதல் கவனத்துடன் செயல் பட்டு வருகிறாராம். இன்னும் சொல்லப்போனால் மேலிடத்து பெரும் புள்ளி கணக்கை எல்லாம் மாஸ் நடிகர் தவிடு பொடி ஆக்கி வருவதால் மேலிடத்து பெரும் புள்ளி மிகவும் குழப்பத்திலும் அப்செட்டிலும் இருக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X