இசையமைப்பாளருக்கு நடிகர் செய்த துரோகம்.. ஜென்மங்கள் எடுத்தாலும் விட மாட்டாரு போல!
சென்னை: இந்த நடிகரின் முதல் படத்தில் இருந்தே திரையுலகமும் ரசிகர்களும் கவனித்து வருகிறார்கள். அவரது சீரான வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கிறது. இப்படி இருக்கையில் நடிகர் தனது ஆரம்ப காலத்தில் இருந்தது போலவே இருந்திருந்தால் நடிகருக்கு இப்படி ஒரு பிளாக் மார்க் அவரது திரைவாழ்க்கையில் விழுந்திருக்காது. ஆனால் புகழின் மமதையில் நடிகரின் நடவடிக்கை மாறவே, அது இப்போதும் மறையாமல் அப்படியே உள்ளது.
அதாவது நடிகரின் திரைவாழ்க்கையில் அவருக்கு அமைந்த பாடல்கள் ரொம்பவும் முக்கியமான வெற்றியை பெரிய விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படி இருக்கையில் நடிகர் ஒரு குறிப்பிட்ட ஜெர்னர் படங்கள் என்றால் இந்த இசையமைப்பாளர் தான் சரி என்று முடிவெடுத்துவிடுவார். அந்த இசையமைப்பாளரும் நடிகர் எப்போது கேட்டாலும், தனக்கு எத்தனை படங்கள் வரிசையாக இருந்தாலும், நடிகருக்காக சரி என்று ராப்பகலாக இழுத்துப் போட்டு வேலை செய்து கொடுப்பார்.

மன்னிக்க முடியாத அளவுக்கு: அப்படி இருக்கையில் நடிகரின் ஒரு செயல் இசையமைப்பாளரின் வாழ்க்கையையே மொத்தமாக புரட்டிப் போட்டுவிட்டது. அதுவும் நடிகர் மீது நம்பிக்கை வைத்த இசையமைப்பாளரால், நடிகரால் தனக்கு இப்படி ஒரு சூழல் உருவாகும் என்றோ, நடிகர் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்வார் என்றோ ஒருபோதும் நினைத்ததில்லை. அப்படியான நிலையில் நடிகர் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்ததை அடுத்து நடிகரை அடிக்காத குறையாக விட்டு வைத்துள்ளார் இசையமைப்பாளர் என்ற பேச்சுக்கள் இப்போதும் திரைத்துறையில் உள்ளது.
துரோகம்: ஆனாலும், இசையமைப்பாளர் அப்படி எல்லாம் எதுவும் செய்யாமல், நடிகரை மொத்தமாக விட்டு விலகிவிட்டார். இப்படி இருக்கையில் நடிகரை எப்போதும் மன்னிக்கவே கூடாது என்றும், நடிகர் தனக்கு இப்படி துரோகம் செய்ய தனக்கு நெருக்கமான ஒருவரும் காரணம் என்பதால் அவரது உறவையும் மொத்தமாக துண்டித்துவிட்டார். இப்படி இருக்கையில் இசையமைப்பாளர் சமீபத்தில் கூட, நான் எனது கடந்த காலத்திற்கு சென்று, யாரையும் வெள்ளந்தியாக நம்ப வேண்டாம் என்று அறிவுரை கூறிக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளது நடிகர் தனக்கு செய்த துரோகத்தை வைத்துதான் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











