எடுபடாத பவர் நடிகரின் ரூட்.. சக்சஸில் பதிலடி கொடுத்த அடிதடி நடிகர்.. ஊரே கவனிக்குது
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியாகும் முன்பே சமூக வலைதளங்களில் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பிரச்சாரங்கள் நடப்பது இப்போது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு அடிதடி நடிகரின் படம் தொடர்பாக நடந்த சம்பவம், கோலிவுட்டில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. காரணம், திட்டமிட்டு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நெகட்டிவ் பிரச்சாரத்தை மீறி அந்த படம் வசூலிலும், மக்கள் வரவேற்பிலும் வெற்றியைப் பதிவு செய்திருப்பதுதான்.
அந்த அடிதடி நடிகர் நடித்திருந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே நல்ல வெற்றியைப் பெற்றிருந்ததால், இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ரிலீஸுக்கு முன்பாக படக்குழுவும் தீவிர புரமோஷனில் ஈடுபட்டது. அப்போது நடந்த ஒரு பேட்டியில், தற்போது அரசியலிலும் முக்கிய இடத்தில் இருக்கும் பவர் நடிகரை அவர் குறிப்பிட்ட விதம்தான் பின்னர் சர்ச்சையாக மாறியதாக கூறப்படுகிறது.
வழக்கமாக ரசிகர்கள் பயன்படுத்தும் அடைமொழியை தவிர்த்து, அவரது பெயரை மட்டுமே குறிப்பிட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தனர். அதன்பிறகு, ஒரே நேரத்தில் ஏராளமான கணக்குகளில் இருந்து அந்த நடிகரையும், அவரது புதிய படத்தையும் குறிவைத்து நெகட்டிவ் பதிவுகள் வெளியானதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. படம் வெளியாகும் முன்பே "இது தோல்வி", "படம் ஓடாது", "ரசிகர்கள் நிராகரித்துவிட்டார்கள்" என்ற ரீதியில் ஒரே மாதிரியான பதிவுகள் தொடர்ச்சியாக பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், திரையரங்குகளில் நிலைமை வேறு மாதிரி. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்ததால், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் பெரிதாக எடுபடவில்லை. முதல் வார இறுதியிலேயே படம் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை பதிவு செய்ததுடன், திரையரங்குகளிலும் கூட்டம் குறையாமல் இருந்ததாக விநியோக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், மூக வலைதள தாக்குதல் குறித்து, "ஆமாம்... அந்த மாதிரியான விஷயங்கள் நடந்தது. அது தனிப்பட்ட முறையில் எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அதை அரசியல் கண்ணோட்டத்தில் நான் பார்க்க விரும்பவில்லை. படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்" என்று கூறியதாக தகவல்.
அதோடு நிற்காமல், சமூக வலைதளங்களில் தனிநபர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் குறித்து மிகவும் வெளிப்படையாகவும் தனது கருத்தை பதிவு செய்தாராம். "இன்று எனக்கு நடந்திருக்கலாம். நாளை வேறு யாருக்காவது நடக்கலாம். அதனால் இப்படிப்பட்ட கலாச்சாரத்தை யாராக இருந்தாலும் எதிர்க்க வேண்டும். ஒரு சமூகமாக நாம் ஆரோக்கியமான விவாதங்களை நோக்கி செல்ல வேண்டும். ஒருவரை குறிவைத்து அவதூறு பரப்புவதோ, போலியான பிம்பத்தை உருவாக்குவதோ சினிமாவுக்கும் நல்லதல்ல, சமூகத்திற்கும் நல்லதல்ல" என்ற எண்ணத்தில் அந்த நடிகர் இருக்கிறாராம். பவர் நடிகரின் நெருங்கிய வட்டத்திற்கு இந்த தகவல் பெரிய அப்செட்டைக் கொடுத்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications