கொரோனா காலத்தில் தீவிரமடைந்த கொக்கைன் கலாச்சாரம்.. கணவன் மனைவியாக மாட்டப்போகும் பிரபலங்கள்?
சென்னை: மொத்த தமிழ் சினிமா உலகமும் நடுநடுங்கிக் கொண்டு இருக்கிறது. காரணம் கொக்கைன் விவகாரம்தான். ஏற்கனவே இந்த விவகாரத்தில் இதுவரை இரண்டு பிரபல நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது மட்டுமல்லாமல் காவல்துறை தரப்பில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அதனால்தான் மொத்த தமிழ் திரையுலகமும் நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த கொக்கைன் கலாச்சாரம் திரைத்துறையில் காதும் காதும் வைத்தது போல நடைபெற்றுக் கொண்டு இருந்துள்ளது. குறிப்பாக திரைப்பிரபலங்கள் மட்டும் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் கொக்கைன் பயன்பாடு அதிகமாக நடைபெற்றுள்ளது. முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், அவர்களின் உதவி இயக்குநர்கள் என பலரும் இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்வார்களாம்.

துபாய் நடிகர்: இந்த கொக்கைன் கலாச்சாரம் முதலில் குறிப்பிட்ட சில நடிகர்கள் நடிகைகள் மத்தியில் தான் இருந்துள்ளது. இது பரவலாக பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வசம் சென்றடைய கொரோனா காலகட்டம் மிகவும் முக்கியமாக இருந்துள்ளது. அதாவது கொரோனா காலத்தில் கணவன் மனைவியாக உள்ள பிரபலங்கள் துபாயில் உள்ள நடிகரின் துணையுடன் இந்த கொக்கைன் பிசினஸை மிகவும் சிறப்பாக நடத்தி வந்துள்ளார்கள். இது மட்டுமல்லாமல் மற்றொரு நடிகையும் தனக்குத் தெரிந்த மற்றும் நெருங்கிய வட்டாரத்திற்கு தரமான கொக்கைன்களை விநியோகம் செய்துள்ளார் என்ற பேச்சு அடிபடுகிறது.
தீவிரம் காட்டும் காவல்துறை: காவல்துறை இதுவரை நடத்திய விசாரணையில் இந்த விவகாரத்தில் பல நடிகர்களும் நடிகைகளும் சம்பந்தப்பட்டிருப்பது வாட்ஸ் ஆப் உரையாடல் மற்றும் டெலிகிராம் குரூப் என பலரது பெயர்களும் உரையாடல்களும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் இந்த வாட்ஸ் ஆப் சாட் மற்றும் டெலிகிராம் குரூப் உள்ளிட்டவை மட்டும் இல்லாமல், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரின் வாக்குமூலத்தை பெற முயற்சித்து வருகிறார்களாம்.
கணவன் மனைவி: இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தை சுற்றுவதால், அந்த கணவன் மனைவி பிரபலம் உட்பட இன்னும் திருமணமாகாத நடிகையும் திக் திக் என்ற மனநிலையிலேயே இருகிறார்களாம். மொத்தத்தில் இந்த கொக்கைன் விவகாரம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் காவல்துறையும் மிகத் தீவிரமாக இந்த வழக்கை விசாரித்து வருகிறார்களாம். இது மட்டுமல்லாமல் பாடகி ஒருவர் தன்னிடம் ஆதாரம் இருக்கிறது எனக் கூறியுள்ளதால், காவல்துறை அவரை அணுகி ஆதாரங்களை வாங்கினால் பலர் சிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











