திரைமறைவில் நடிகரின் அரசியல் நடவடிக்கை.. உஷாராக ஏற்பாடு செய்தது கை கொடுக்குதாம்!
சென்னை: நடிகர் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கும் நடிகர், திடீரென அரசியலில் களமிறங்கினார். இப்படி இருக்கையில் அரசியலில் அவர் நடத்திய கூட்டங்கள், மாநாடுகள், கட்சி நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் அவர் தான் செலவு செய்தாராம். இதில் ஊடகங்களில் இவரது கட்சி நிகழ்ச்சி என்றாலே சாப்பாடு குறித்த தடபுடலான தகவல்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்ததால் அதற்கும் அதிக அளவில் செலவு செய்துள்ளார் நடிகர். இப்படி இருக்கையில் அவரது பணம் தண்ணி போல செலவாக, நடிகர் எடுத்த முடிவுதான் இப்போது அவருக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளதாம்.
அதாவது நடிகர் தனது சொத்துக்கள் பலவற்றையும் விற்று அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டு வெளிநாட்டில் நிலம் வாங்கி போட்டு விட்டாராம். அது மட்டும் இல்லாமல் நடிகருக்கு மிகவும் வேண்டப்பட்ட நடிகையின் பெயரிலும் தனது பினாமி பெயரில் வாங்கிய நிலத்திற்கு அருகில் நிலம் வாங்கி வைத்துள்ளாராம்.

வெளிநாட்டில் சொத்து: நடிகர் தனது சொத்துக்களை விற்று அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டு வெளிநாட்டில் நிலம் வாங்கியது எல்லாம் சரிதான் என்றாலும், நடிகர் இதைச் செய்ய முக்கியமான மற்றொரு காரணமும் இருக்கிறதாம். அதாவது இந்த தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெறுவது சிரமம் என்று அவரே உணர்ந்து விட்டாராம். அதனால் தான் தனது கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு அவர்களையே செலவு செய்யச் சொல்கிறாராம்.
மாஸ்டர் பிளான்: யாரால் எல்லாம் முடியாது என்று கூறுகிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்காமல், வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள், குற்றப்பின்னணி கொண்டவர்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், வாய்ப்பு வழங்க இதுதான் முக்கிய காரணமாம். இது மட்டும் இல்லாமல், இப்படி அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் அந்த நடிகர் கட்சி இந்த தேர்தலில் எவ்வளவு வாக்குகள் எடுக்கும் என்பதை எந்தவிதமான செலவுமே இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் திட்டம் போட்டு உள்ளாராம். இது மட்டும் இல்லாமல், நடிகரும் இந்த தேர்தலில் தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் பல வகைகளில் காய்கள் நகர்த்தி வருகிறாராம். அதுவும் நடிகர் பிரசாரத்தில் சிம்பதி வசனங்களைப் பேசி மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து விட திட்டம் போட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











