நடிகைதான் எல்லாம்னு முடிவெடுத்த அரசியல் நடிகர்.. முக்கிய பொறுப்பு ரெடி.. பெரும் புள்ளிகளை ஓரம் கட்ட பிளான்!

By Staff

சென்னை: இந்த நடிகர் சினிமாவில் அரசியல் பேசி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அரசியலிலும் ஒரு கால் வைத்து பார்க்கலாமே என்று நினைத்து தனது ரசிகர் மனறத்தை வைத்து சில லோக்கல் எலெக்‌ஷனில் தனது படத்தை பயன்படுத்தி ஓட்டு கேட்க வைத்தார். இதில் நடிகர் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக அவரது ரசிகர்கள் வெற்றி பெற அனைவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து அறிவுரை கூறி அனுப்பினார். இப்படி இருக்கையில் நடிகர் தனது ரசிகர் மன்றத்தை அப்படியே அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தார்.

சினிமாவில் அரசியல் வசனங்களைப் பேசியதால் நடிகர் தனது அரசியல் மேடைகளில் தமிழ்நாடு அரசியலை பிச்சு உதறுவார் என்று எதிர்பார்த்த பலருக்கும் நடிகரின் பேச்சு ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதாவது சினிமாவில் அரசியல் வசனங்களைப் பேசிய நடிகர், அரசியல் மேடையில் சினிமா வசனங்களைப் பேசிக்கொண்டு இருக்கிறாரே என்று விமர்சிக்கத் தொடங்கினர்.

Tamil Cinema Gossip Political Actor Who Ready To Appoint His Very Close Actress As Important Role in His Pary

நடிகருக்கு நெருங்கிய நடிகை: இது ஒரு புறம் இருக்க நடிகருக்கு நடிகை ஒருவருடன் ஏற்கனவே இருந்த நெருங்கிய தொடர்பு தற்போது அவரது அரசியல் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறதாம். இதனால் நடிகர் மற்றும் நடிகை சேர்ந்து எடுத்த முடிவில் நடிகைக்கு நடிகரின் கட்சியில் மிகவும் முக்கியமான பொறுப்பு வழங்கப்படவுள்ளாதாம். அதுவும் மாநில அளவில் பொறுப்பு வழங்கி நடிகையை தனக்கு அடுத்த நிலையிலேயே வைத்துக் கொள்ள நடிகர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகைக்கு முக்கியப் பொறுப்பு: இது மட்டும் இல்லாமல் நடிகையை தேசிய அளவிலான கட்சி ஒன்றுடன் நடிகர் தனது கட்சி உடனான கூட்டணிக்கு போதிய அளவில் சீட் கேட்டு பெற்று வர அனுப்பி உள்ளாராம். இது மட்டும் இல்லாமல் நடிகரும் இன்னும் சில தினங்களில் முக்கிய நகரம் ஒன்றுக்கு செல்லவுள்ளதால், நடிகையை முன்கூட்டியே அனுப்பி வைத்து விட்டாராம். நடிகைக்கு கட்சிக்குள் நடிகர் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பார்த்து மூத்த நிர்வாகிகள் பலரும் அப்செட்டில் இருக்கிறார்களாம். ஆனால் நடிகையும் நடிகரும் அப்செட்டில் உள்ளவர்களை அப்படியே ஓரம் கட்டவும் திட்டம் வைத்துள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X