அரசியல் நடிகர் எடுத்த அவசர முடிவு.. தலையில் துண்டு போடும் நிலையில் தயாரிப்பாளர்.. தப்பிப்பாரா?

By Staff

சென்னை: ரிலீஸ் நேர பிரச்னைகள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரே நடிகர் மட்டும் தான் புகழ் பெற்றவர். மற்ற படங்களுக்கு என்னதான் பிரச்னைகளும் சவால்களும் இருந்தாலும் இந்த நடிகரின் படத்திற்குத்தான் தினுசு தினுசாக பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும். இப்படி இருக்கையில் இந்த நடிகரின் நடிப்பில் உருவாகி உள்ள படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு என்னதான் பாடாய்ப் பட்டாலும் படத்தின் பிரச்னை தீராது போல என்று இருக்கிறது நிலவரம். இதனால் படத்தின் நாயகனான அரசியல் நடிகர் அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.

அதாவது, படத்தின் ரிலீஸ் பிரச்னையைத் தீர்க்கத்தான் நீதிமன்றத்திற்குச் சென்றோம். ஆனால் இப்போது நீதிமன்ற பிரச்சனையை தீர்க்கவே அடுத்தடுத்த உயர்மட்ட நீதிமன்றங்களுக்கு போகனும் போலயே என்று குழப்பத்தில் இருக்கிறாராம். தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளரோ தான் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார். ரசிகர்களும் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகும், அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என்று மனதைத் தேற்றிக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Tamil Cinema Gossip Political Actor Who Took Strong Decision to Release His Movie

தயாரிப்பாளரைக் காப்பாற்ற: நிலவரம் இப்படி இருக்கும்போது, தயாரிப்பாளர் முழுவதுமாக மூழ்கிப் போவதற்கு முன்னர் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த நடிகர், இனிமேல் நாங்கள் படத்தின் ரிலீஸ் தொடர்பாக நீதிமன்ற கதவுகளை தட்ட மாட்டோம். இப்போது நாங்கள் கொடுத்துள்ள பிராதையும் சத்தமில்லாமல் திருப்பி வாங்கிக் கொள்கிறோம் என்று முடிவெடுதுள்ளராம்.

நடிகர் எடுத்த தீர்க்கமான முடிவு: இப்படிச் செய்வதால் படத்தை ரிலீஸ் செய்வதற்கு உள்ள பிரச்னைகளை எதிர் கொண்டு, அதன் பின்னரே படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம். இதனால் படம் எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் பரவ, விவரம் அறிந்தவர்களோ, நீதிமன்றத்தை நாடியதே இந்த நடிகர் பேச்சைக் கேட்டுத்தான். ஆனால் இப்போது அந்த நடிகரே நீதிமன்றத்தில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதால், இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருந்து இருக்கலாம் என்று விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X