பழைய நடிகைக்கு செட்டில்மெண்ட் ஓவர்.. புது நடிகைக்கு பீச் ஹவுஸை கிஃப்ட் செய்த முக்கியப் புள்ளி!
சென்னை: இந்த முக்கியப்புள்ளி திரையுலகில் ரொம்பவும் முக்கியமானவர். முதலில் படங்களைத் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தவர், ஒரு கட்டத்திற்கு மேல், சினிமாவில் நடிக்கவும் செய்தார். இவர் தயாரிப்பாளராக இருக்கும்போது நடிகைகளிடம் ரொம்பவும் நெருங்கிப் பழக வேண்டும் என்று ஆசைப்படுவாராம். நடிகராக மாறிய பின்னர் அவரது லூட்டி கொஞ்சம் ஓவராகவே போய் உள்ளது.
முதலில் இவர் ஒரு நடிகையுடன் ரொம்பவும் நெருங்கிப் பழகியது திரைத்துறையில் பெரும் பேசு பொருளாக மாறியது. அந்த நடிகையும் தன் காதுபடவே யாராவது பேசினாலும் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல், தனக்குத் தேவையானது எல்லாம் கரன்சி தான், அதைக் கூடுமான அளவுக்கு கறந்த பின்னர் அவரைக் கழட்டி விட்டு விடலாம் என்று முடிவெடுத்து இருந்துள்ளார். ஆனால் அந்த முக்கியப் புள்ளியோ சில ஆண்டுகளாகவே நடிகையைப் போட்டு தனது சௌகரியத்துக்கு வதைத்து வந்துள்ளார். நடிகை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு காரை அனுப்பி தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைத்துவிடுவாராம்.
இந்த நடிகை கழட்டிவிட்ட பின்னர், வேறு ஒரு நடிகையைப் பிடித்தார். இந்த நடிகை வெளியில் இருந்து இறக்குமதி ஆன நடிகை தான். இந்த நடிகையோடு இந்த முக்கியப் புள்ளி ஒரு படம் தான் நடித்தார். ஆனால் அந்த நடிகை தனது வலையில் வீழ்த்தி முதல் நடிகைக்கு என்னவெல்லாம் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் போட்டாரோ அதேபோல்தான் இந்த நடிகைக்கும் போட்டுள்ளார். இதில் என்னவென்றால் இந்த நடிகைக்கு வெளிநாட்டில் வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளாராம் இந்த புள்ளி.

பழைய நடிகைக்கு செட்டில்மெண்ட்: இந்த நடிகையுடன் இவர் ஓவர் நெருக்கமாக இருப்பதாக பலரும் பேச, உஷாரான முக்கியப் புள்ளி இனிமேல் இங்க வண்டி ஓட்டினால் லாக் ஆகி விடுவோம் என நடிகைக்கு பெரிய அமௌவுண்ட்டை கொடுத்து செட்டில் செய்துள்ளாராம். இது மட்டும் இல்லாமல் நடிகை வேறு ஒருவருடன் காதலில் இருப்பது போல செட்டப் ஒன்றையும் ஏற்படுத்திக் கொடுத்து தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள முயற்சி எடுத்துள்ளாராம். ஆனால் அவை எல்லாம் ஒர்க் அவுட் ஆகவில்லை.இந்நிலையில் இந்த புள்ளி இப்போது புதிய நடிகை ஒருவரை தனது சுகபோகத்திற்கு அணுகி வருகிறாராம்.
பல கோடிகள்: இந்த புள்ளியை பற்றி நன்கு தெரிந்து கொண்ட நடிகையோ முதலில் இருந்தே தனது இஷ்டத்துக்கு லிஸ்ட் போட்டு கொடுத்து வருகிறாராம். அதில் ஒன்றுதான் பல கோடிகள் மதிப்புள்ள கடற்கரை வீடு. அந்த வீட்டில் பெரிய நீச்சல் குளத்துடன் வேண்டும் என்று கேட்க, பிரபலமோ நடிகை ஆசைப்பட்டதைப் போல எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளாராம். நடிகை அடுத்ததாக பல கோடிகள் மதிப்பிலான கார் ஒன்றைக் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏகபோக வாழ்க்கைக்கு முக்கியப் புள்ளி பல கோடிகளை செலவு செய்து வருகிறார் என்பது குறித்த பேச்சு கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்து கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











