பாக்ஸ் ஆபிஸில் அடிமேல் அடி வாங்கும் நடிகர்.. ஆள விடுடா சாமினு தலைமறைவான தயாரிப்பாளர்

By Staff

சென்னை: இந்த நடிகர் பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். துணை நடிகர், வில்லன், கதாநாயகன் என பல கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். ஆனால் இவரது கடைசி சில படங்கள் சரியாக போகாத காரணத்தால் அவர் கமிட் ஆன படத்தின் தயாரிப்பாளர் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தலைமறைவானதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது தான் திரையுலகில் பேச்சாக உள்ளது.

ஏற்கனவே சொன்னது போல நடிகர் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உள்ளார். நடிகரை ஆளாக்கியதில் பெரிய நடிகர் ஒருவருக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளது. இப்படி இருக்கும்போது, நடிகர் தனது திரைவாழ்க்கையில் மெல்ல மெல்ல உயர்ந்து வந்துள்ளார். இவர படம் வெளியாகிறது என்றால் முதல் நாளே பெரிய அளவில் ஓபனிங் எல்லாம் இருக்காது. ஆனால் சில நாட்களில் படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கத்தினால் படம் பார்க்க குடும்பம் குடும்பமாக வருவார்கள்.

ஆனால் இது எல்லா படங்களுக்கும் நடைபெறுவது இல்லை. நடிகரின் உடன் பிறப்பும் கதாநாயகனாக அறிமுகம் ஆக ஆசைப்பட்டுள்ளார். இதனால் நடிகரோ அதற்கான ஏற்பாடுகளையும் எல்லாம் செய்து கொடுக்க, இப்போது அந்த படத்தை முழுவதுமாக எடுத்து முடித்து ரிலீஸ் செய்ய போதுமான பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

Tamil Cinema Gossip Producer Who Abscond Because Of Actor Gives Money Torture

நடிகர் கொடுத்த டார்ச்சர்: இப்படி இருக்கும்போது தன்னை வைத்து படம் தயாரிக்க வந்த, தயாரிப்பாளரிடம் முதலில் எந்த கண்டிஷனும் போடாமல் படத்தில் கமிட் ஆகியுள்ளார். தயாரிப்பாளர் தயாரித்த முந்தைய படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை குவித்ததால் தயாரிப்பாளரிடம் பணம் விளையாடும் என நினைத்துக் கொண்டு, தயாரிப்பாளரிடம் தனது உடன் பிறப்பு நடித்துள்ள படத்திற்கு நீங்கள் இணை தயாரிப்பாளராக இருந்து படத்தை முடித்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்துள்ளார்.

தலைமறைவான தயாரிப்பாளர்: இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான தயாரிப்பாளர் இந்த நடிகரின் கடைசி சில படங்களே சரியாகப் போகவில்லை. அப்படி இருந்தும் இந்த படத்தை தான் தயாரிக்க காரணம் படத்தின் கதை மீது இருக்கும் நம்பிக்கை. ஆனால் நடிகர் கொடுக்கும் குடைச்சலைப் பார்த்தால் தன்னை பெரும் கடனாளியாக மாற்றிவிடுவார் போலயே என நெருங்கிய வட்டத்தில் சொல்லிக் கொண்டு இருந்துள்ளார். இப்படி இருக்கும்போது நடிகர் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகவே தயாரிப்பாளர் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட பலரும், நடிகருக்கு வாய்ல சனி போலயே என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X