மாத்தி மாத்தி பேசும் வாரிசு நடிகர்.. அந்த சம்பவத்திற்கு பிறகு ரொம்பவும் மோசமா மாறிட்டாராம்!
சென்னை: இந்த வாரிசு நடிகர் சினிமாவில் நடிக்க வரும்போதே தனது அண்ணனிடம் அடியும் மிதியும் வாங்கித்தான் கெரியரைத் தொடங்கினார். சினிமாவிற்குள் இவர் என்ட்ரி கொடுத்த போது அவரைக் கேலி செய்யாத சினிமா உலகினரே இல்லை என்று கூறும் அளவுக்கு இவரை மோசமாகவே விமர்சித்துள்ளனர். ஆனால் அதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் சினிமாவில் வெறித்தனமான ஸ்டாராக மாற வேண்டும் என்று முடிவெடுத்து அதில் வென்றும் காட்டி உள்ளார். இன்றைக்கு பான் இந்தியா ஸ்டாராக மாறி உள்ளார். இப்படி இருக்கையில் இவருக்கும் ஒரு தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளதாம்.
அதாவது நடிகரை தனது கம்பெனிக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்கச் சொல்லி தயாரிப்பாளர் ஒருவர் மிகப்பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்து தமிழ்நாட்டிற்கே இரண்டு முதலமைச்சர்கள் மாறிவிட்டார்கள். அடுத்து தேர்தலும் நடைபெற உள்ளது. ஆனால் நடிகர் தனக்கு இன்னும் தேதி கொடுக்க வில்லை என்று தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம். தயாரிப்பாளர் கொடுத்த புகாரில் நடிகருக்கு ரெட் கார்டு கொடுத்து விடலாம் என்று முடிவெடுக்கும் அளவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் செல்ல, உடனே தயாரிப்பாளரை அழைத்து காம்ப்ரமைஸ் பேசி உள்ளார் நடிகர்.

காம்பர்மைஸ்: முதலில் கறார் காட்டிய தயாரிப்பாளர் அதன் பின்னர், நடிகர் என்னதான் சொல்ல வருகிறார் என்று கேட்டுள்ளார். உடனே நடிகரோ சார், உங்களுக்கு நீங்க கொடுத்த அட்வான்ஸ் வேண்டும் என்றாலும் நான் கொடுக்கிறேன் என்று காம்பர்மைஸ் பேசி உள்ளார். ஆனால் தயாரிப்பாளரோ பணமாக தருவதாக இருந்தால் வட்டியுடன் கொடுத்துவிடுங்கள் என்றும் கூறி உள்ளார்.
மீண்டும் கடுப்பில் தயாரிப்பாளர்: இதை எதிர்பார்க்காத நடிகரோ, சார் நான் உங்களுக்கு படமே நடித்துக் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இது மட்டும் இல்லாமல், தான் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததுமே தான் உங்களுக்கு தேதி கொடுப்பதாக " தெரிவித்துள்ளார். நடிகரின் பேச்சை நம்பி புகாரை வாபஸ் வாங்கிவிட்டார் தயாரிப்பாளர். ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பாளருக்கு தேதி கொடுக்காமல் அடுத்ததாக நான்கு படங்களுக்கு தேதி கொடுத்துவிட்டாராம். இதனால் தயாரிப்பாளர் மீண்டும் செம அப்செட் மோடுக்கு சென்றுவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











