பவர் நடிகரின் விசுவாசியை வைத்து கேம் ஆடும் தயாரிப்பு நிறுவனம்.. சமயம் பார்த்து அட்டாக்!
சென்னை: தமிழ்நாடு அரசியலையும் தமிழ் சினிமா உலகையும் பிரித்துப் பிரித்துப் பார்ப்பது கொஞ்சம் சிரமமானது. சினிமா உலகத்தின் தாக்கம் அரசியலிலும் அரசியலின் ஆதிக்கம் சினிமா உலகத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி இருக்கையில் பவர் நடிகரின் வாரிசு படத்தை அட்டாக் செய்யும் நோக்கத்தில் பவர் நடிகரின் விஸ்வாசி நடித்த படத்தை ரிலீஸ் செய்ய பக்காவா பிளான் போட்டு களமிறங்கி உள்ளதாம் பெரிய தயாரிப்பு நிறுவனம்.
அதாவது இந்த தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த கட்சிக்கு மிகவும் நெருக்கமான மற்றும் வேண்டப்பட்ட நிறுவனம். என்னதான் நெருக்கம் இருந்தாலும், அவர்கள் மற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்த வகையிலும் தொல்லை கொடுக்க மாட்டார்கள் என்ற நல்ல பெயரும் உள்ளது. இப்படி இருக்கையில் அவர்கள் தயாரிப்பில் உருவாகி ரிலீஸ்க்குத் தயாராக உள்ள படத்தில் பவர் நடிகரின் விஸ்வாசி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படி இருக்கையில், இந்த படத்தை எப்போது ரிலீஸ் செய்தாலும் ஆளும் தரப்பில் இருந்து ஏதாவது குடைச்சல் கொடுத்து அலைய விட அதிக வாய்ப்பு உள்ளதாக படக்குழு கருதுகிறது என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில் படத்தை நேரடியாக ஓடிடிக்கே கொடுத்து விடலாமா என்ற பேச்சும் அடிப்பட்டதாம். ஆனால் தயாரிப்பு குழுவில் இருக்கும் ஒரு மாஸ்டர் மைண்டோ கொஞ்சம் பொறுத்திருந்தால் படத்தை எந்த சிக்கலும் இல்லாமல் ரிலீஸ் செய்துவிடலாம், அப்படியே பிரச்னை வந்தாலும் ஆளும் தரப்பின் மீது தானாகவே பழி விழும், இதனால் படத்திற்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று ஆளும் தரப்பில் நினைக்க அதிக வாய்ப்பு உள்ளதால் படத்தை அந்த காலகட்டத்தில் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று ஐடியா கொடுத்ததாக பேச்சுக்கள் அடிபடுகிறது.
தற்போது ஆளும் தரப்புக்கு நெருக்கமான படம் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பு வெளியான அதே நாளில் அந்த தயாரிப்பு நிறுவனமும் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இதில் படக்குழு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும் படத்தில் நடித்த நாயகனோ, நமது அன்புக்குரியவரின் மகனின் படத்திற்கு எதிராக நமது படத்தை வெளியிடுகிறார்களே, இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார் என்ற பேச்சுத்தான் பலமாக அடிபடுகிறதாம்.


Click it and Unblock the Notifications