திரையில் பற்ற வைத்த கெமிஸ்ட்ரி.. ரீல் காதல் ரியல் காதலாகிடுச்சா?.. கோலிவுட்டில் அடுத்த ஜோடி ரெடியா?

சென்னை: தமிழ் சினிமாவில் ஒன்றாக நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்து காதல் கிசுகிசுக்கள் பரவுவது புதிதல்ல. ஆனால் சில ஜோடிகள் திரையில் காட்டும் கெமிஸ்ட்ரி, ரசிகர்களையே "இவங்க நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கிறாங்களோ?" என்று யோசிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு புதிய பேச்சுதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்தில் வெளியான ஒரு இளம் நடிகரின் திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகையும், அந்த இளம் ஹீரோவும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், இருவரும் சில காலமாக டேட்டிங் செய்து வருகிறார்கள் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பல்வேறு பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. காரணம், இந்த கிசுகிசு குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. மறுப்பும் இல்லை... உறுதிப்படுத்தலும் இல்லை... அதனால் இந்த பேச்சு நாளுக்கு நாள் இன்னும் அதிகமாகி வருகிறது.

இதற்கிடையில், இந்த ஜோடி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த இளம் இயக்குநர் ஒருவர் இயக்காமல், இந்த முறை அவரே ஹீரோவாக அறிமுகமாகி நடித்துவருவதாக கூறப்படுகிறது. அந்த படத்திலும் இதே ஜோடி மீண்டும் இணைந்திருப்பதால், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பரவி வரும் காதல் கிசுகிசுவுக்கு இது மேலும் தீனி போட்டுள்ளது.

Tamil Cinema Gossip Reel Chemistry Turns Into Real Love Dating Rumours Around Young Kollywood Pair Spark

"திரையில் இவ்வளவு இயல்பான கெமிஸ்ட்ரி வருவதற்கு பின்னால் ஏதாவது காரணம் இருக்கிறதா?", "அதனால்தான் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறாங்களா?" என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. இன்னும் சிலர், "படத்தின் புரமோஷனுக்காக இப்படியான தகவல்கள் பரப்பப்படுகிறதா?" என்ற சந்தேகத்தையும் முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுவது வேறு. படப்பிடிப்பில் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டதுதான் இந்த கிசுகிசுவுக்கு காரணம் என்றும், அதையே சமூக வலைதளங்களில் சிலர் காதல் கதையாக மாற்றிவிட்டதாகவும் ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு தரப்போ, "புகை இல்லாமல் தீ வராது" என்று இந்த பேச்சை மேலும் சூடுபடுத்தி வருகிறது.

எது எப்படி இருந்தாலும், இதுவரை இருவரில் யாரும் இந்த தகவலுக்கு பதில் அளிக்காததே, சமூக வலைதளங்களில் இந்த காதல் கிசுகிசுவை தொடர்ந்து பேச வைக்கும் முக்கிய காரணமாக மாறியுள்ளது. அமைதியே சம்மதமா அல்லது தேவையில்லாத வதந்திக்கு பதில் சொல்ல வேண்டாம் என்ற முடிவா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த காதல், டேட்டிங், விரைவில் திருமணம் என்ற பேச்சு மட்டும் கோலிவுட்டில் தற்போது செம ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பதில் சம்பந்தப்பட்ட இருவரிடமிருந்து வருமா, இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X