நடிகை அட்ஜெஸ்மெண்ட்க்கு வரச் சொன்ன இயக்குநர்.. கேரவனுக்குள் கூப்பிட்டு கன்னத்தை பழுக்க வைத்த நடிகர்!

By Staff

சென்னை: அந்த நடிகை சினிமாவில் பல ஆண்டுகளாக இருந்தாலும் அவருக்கு என பெரிய பிரேக் எதுவும் கிடைக்காமல் இருந்த நடிகை. நன்றாக நடிக்க கூடியவர். எந்த கதாபாத்திரம் அமைந்தாலும் அதில் ஒரு கை பார்க்க கூடிய நடிகைதான் அவர். பல ஆண்டுகளாக இருக்கிறாரே அவருக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கலாம் என கொடுத்துள்ளார் இயக்குநர் ஒருவர்.

இந்த இயக்குநர் ஏற்கனவே நடிகைகளை கெஸ்ட் ஹவுஸ்க்கு வரச்சொல்லி, அங்கு அவர்களின் பர்ஃபாமன்ஸைப் பார்த்து படத்துக்கு தேர்வு செய்யும் இயக்குநரின் கெஸ்ட் ஹவுஸ் ஸ்கூலில் இருந்து வந்தவர். அப்படி இருக்கும் போது இவர் மட்டும் என்ன யோக்கியனாகவா இருப்பார் என திரைத்துறையினர் யோசிக்கும் அளவுக்கு இவரது நடவடிக்கை அந்த நடிகையிடம் இருந்துள்ளது.

அதாவது இந்த இயக்குநருக்கு அது இரண்டாவது படம். இரண்டாவது படத்திலேயே பெரிய நடிகரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெறுகிறார். தயாரிப்பு நிறுவனம் நடிகருக்கு வேண்டப்பட்டவரின் தயாரிப்பு நிறுவனம் தான். இப்படி இருக்கும்போது அந்த நடிகையை நடிகரின் தங்கை கதாபாத்திரத்திற்கு கமிட் செய்துள்ளார் இந்த இயக்குநர். கமிட் செய்தவர் இந்த படத்தில் கதாநாயகனாக இந்த நடிகர் தான் நடிக்கிறார். நீங்கள் அவருக்குத்தான் தங்கையாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tamil Cinema Gossip Senior Actor Who Beats Young Director For Harassment Issue

இயக்குநரின் சேட்டை: நடிகையும் எல்லாம் சரி எனக் கூறியுள்ளார். இயக்குநரும் அங்கிருந்து கிளம்பிய பின்னர், தனது உதவியாளரிடம் சொல்லி, நடிகையை கெஸ்ட் ஹவுஸ்க்கு வரச்சொல்லி உள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகை அதிர்ச்சியில் உறைந்து, இயக்குநருக்கு போன் செய்துள்ளார். இயக்குநரும் உங்களுக்கு கொஞ்சம் ஃபோட்டோ சூட் எடுக்கனும், அது மட்டும் இல்லாமல் நாம ரெண்டு பேரும் தனியா சந்தித்து பேசினால் கொஞ்சம் நன்றாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட நடிகை, ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளார்.

அடித்த நடிகர்: இயக்குநரோ நடிகைக்கு நாம் சொன்னது புரிந்துவிட்டது. ஒரு வாரத்துக்குப் பின்னர் கச்சேரி தான் என இருந்துள்ளார். ஆனால் அதற்குள் நடிகை தான் நடிக்கும் படத்தில் கமிட்டான கதாநாயகன் தனக்கு நன்றாக தெரிந்தவர் என்பதால், அவரிடம் போனைப் போட்டு எல்லாவற்றையும் கூறியுள்ளார். இது குறித்து தெரிந்ததும் கோபமடைந்த நடிகர், தான் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது, அங்கு அவரை வரச்சொல்லி உள்ளார். ஆர்வமாக போன இயக்குநருக்கு காத்திருந்தது கச்சேரி. அதாவது, இயக்குநரை கேரவனுக்குள் வைத்து நடிகர் போட்டு அடி துவைத்து எடுத்துள்ளார். அதுவும் தனியாக சந்தித்து பேசனுமா உனக்கு எனச் சொல்லி சொல்லி அடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், இனிமேல் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் எனவும் இயக்குநரை துரத்தி விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X