பெரிய மனுசன்னு நெனச்சா இப்படி பண்ணிட்டாரே.. முதலில் நடிகை அடுத்து நடிகர்.. எப்படித்தான் மனசு வருதோ?

By Staff

சென்னை: இந்த நடிகருக்கு உள்ளூர், வெளியூர், உள்நாடு, வெளிநாடு என உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது இந்த நடிகர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே மிகவும் புகழ் பெற்ற நடிகராக உள்ளார். இந்த நடிகர் சும்மா இருந்தாலும் அவரது வாய் சும்மா இருக்க மாட்டேன் என்கிறது என்பது போல, இவருக்கு அவ்வப்போது சில பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதுவும் குறிப்பாக மைக்கைப் பார்த்து விட்டால் அவரே லூஸ் டாக் விட்டுவிடுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நடிகரின் நடிப்பில் ஒரு படம் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தின் புரோமோசனில் இவர் ஒரு நடிகை குறித்து பேசியது இணயத்தில் வேகமாக பரவியது. அதுவும் குறிப்பாக நடிகையுடன் தனக்கு குளோஸான காட்சிகளே இல்லை என மிகவும் வருத்தப்பட்டு எல்லாம் பேசினார். நடிகையை நான்கு நாட்கள் புக் செய்துவிட்டு, இரண்டு மணி நேரம் மட்டும் நடிகையுடன் தனக்கு காட்சிகள் படமாக்கப்பட்டது என பேசினார்.

Tamil Cinema Gossip Senior Actor Who s Worst Speech About Co Actor

ட்ரோல்: இதனால் இணையவாசிகள் பலரும் நடிகருக்கு ஆசையைப் பார்த்தையா? மகள் வயது நடிகையுடன் குளோஸான காட்சிகள் கேட்கிறாரே என்று எல்லாம் இணையத்தில் விமர்சனத்திற்கு ஆளானார். இப்படி இருக்கும்போது, தனது மற்றொரு படத்தின் புரோமோசனில் கலந்து கொண்டு பேசிய நடிகர், மலையாள நடிகர் ஒருவர் குறித்து பேசுகையில் அவரது உருவம் குறித்து பேசியது பலருக்கும் அதிர்ச்சிதான்.

பெரிய மனுஷன்: தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். இன்றைக்கும் இவர் படத்திற்கு மார்க்கெட் உள்ளது. இப்படி இருக்கும் இவர் தனது படத்தில் நடித்த நடிகர் குறித்து, குறிப்பாக அந்த நடிகரின் உடல் அமைப்பு குறித்து பேசியது பலருக்கும் அதிர்ச்சிதான். மூத்த நடிகர், பெரிய மனுஷன்னு பார்த்த இப்படி எல்லாம் பேசறாரே என பலரும் நடிகருக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள்.

இதெல்லாம் தேவையா?: அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் வயது வாரிசு நடிகை பேசியதை சுட்டிக்காட்டி, நாகரீகமாக பேச வேண்டும் என்றால் எப்படி பேச வேண்டும் என்பதை இந்த இளம் நடிகையை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் எனவும் நடிகருக்கு வகுப்பு எடுத்து வருகிறார்கள். இனிமேலாவது நடிகர் அமைதியாக இருப்பரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பலரும் பெரிய மனுசனுக்கு இதெல்லாம் தேவையா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X