ஒல்லி நடிகர் குறித்து நம்பர் நடிகை சொன்னது எல்லாம் உண்மையா? வடக்கே வத்தி வெச்சுட்டாங்களாமா?

By Staff

மும்பை: இந்த நடிகர் சமீபத்தில் தான் இணையவாசிகள் மத்தியில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டார். தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த நடிகர் பேசிய பஞ்ச் டயலாக்குகளும் அவரது உடல் மொழியும் பார்த்த இணையவாசிகளால் சும்மா இருக்க முடியவில்லை. நடிகரைப் போட்டு பிளந்து கட்டி விட்டார்கள் என்று கூறும் அளவுக்கு இருந்தது. இப்போது நடிகர் மீது நம்பர் நடிகை வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைதான் எனக் கூறும் அளவுக்கு நடிகர் குறித்து வடக்கே பற்ற வைத்துள்ளார் பிரபலம் ஒருவர்.

இந்த நடிகருக்கும் அந்த நடிகைக்கும் சில மாதங்களுக்கு முன்னர் சரியான வார்த்தைப் போரும், சமூக வலைத்தளப் போரும் நடைபெற்றது. போஸ்ட் ஆபீஸில் கொடுத்திருந்தால் நடிகரின் வீட்டுக்கே கொண்டு போய் கொடுத்திருப்பார் எனக் கூறும் அளவுக்கு, அப்பா, அண்ணன் என குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன உறவு எனக் குறிப்பிட்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் அந்த நடிகையும் நடிகையின் கணவரும் பிராது சொல்லி இருந்தார்கள். இந்த பிராது கடிதம் மொத்த கோலிவுட்டையும் பரபரப்பாக்க, நடிகரோ தனது தாரக மந்திரம் ஒன்றை மட்டும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதுதான் நடிகரின் பதில் என அவருக்கு ஆதரவாக சிலர் கம்பு சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

Tamil Cinema Gossip Slim Actor Behavior Was Very Rude With His Assistance

நடிகர் மீது பிராது: அவர்கள் பிரச்னை இப்போது நீதிமன்றத்தில் இருந்தாலும், அவ்வப்போது அவர்கள் ரசிகர்களுக்கு இடையில் வார்த்தை போர்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்றுத்தான் வருகிறது. நடிகர் மீது குடும்பமாக நடிகையும் நடிகையின் கணவரும் பிராது கொடுத்தபோது நடிகை மீது இறக்கப்பட்டார்கள், நடிகரின் நியாயத்தைச் சொன்ன பிறகு கப்சிப் என ஆகிவிட்டார்கள்.

நடிகர் ரொம்ப மோசம்: இப்படியான நிலையில் நடிகர் குறித்து வடக்கு தோஸ்து தேசத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பலருக்கும் பகீர் கிளப்புகிறதாம். இது மட்டும் இல்லாமல், நடிகர் மீது நடிகையின் குடும்பம் கொடுத்த பிராது சரிதான் போல எனக் கூறி வருகிறார்கள். அதாவது நடிகர், வடக்கு வாழ் தேசத்தைச் சேர்ந்த நடிகை ஒருவருடன் படம் ஒன்றில் நடித்தார். அது குறித்தும், அந்த நடிகை குறித்தும் வேலை செய்தது எப்படி இருந்தது என்று கேள்வி கேட்டதற்கு, அதை அந்த நடிகை கிட்ட போய் கேளு என பதில் சொன்னாராம்.

நடிகையின் சித்து விளையாட்டு: இது மட்டும் இல்லாமல் அந்த நடிகர் தனது உதவியாளரை போட்டு கேவலமாக திட்டி வந்தாராம் எனவும் தெரிவித்தது, அணைகிற நெருப்பை மேலும் மூட்டி விட்டது போல மாறிவிட்டது என கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதே நேரத்தில் இப்படி நடிகர் குறித்து வதந்திகளைக் கிளப்புவது நடிகையின் சித்துவிளையாட்டுதான் எனவும் சில பேசிக்கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X