மூன்று லட்சத்துக்கு கம்மியா முடியாது.. 10 நிமிடம் தான்.. ரொம்பவும் கிராக்கி காட்டிய பிரபலம்!

By Staff

சென்னை: இணையமும் சமூக வலைதளமும் சமூகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதே அளவுக்கு தமிழ் சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி இன்ஃபூளியன்சர்களாக மாறி நிற்கும் இந்த சோஷியல் மீடியா செலிபிரிட்டிகள் செய்யும் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதில் ஒரு பிரபலம் ரொம்பவும் கிராக்கி செய்கிறாராம்.

சமீபத்தில்தான் தமிழ் சினிமா விமர்சகர்கள் பலரும் சின்ன படங்களை விமர்சனம் செய்ய பணம் வாங்குகிறார்கள் என்ற பேச்சு அடிபட்டு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது இப்படி இருக்க, பிரபலம் ஒருவர் மிகவும் ஒரு வீடியோவுக்கு ரூபாய் 3 லட்சங்கள் வரை கேட்டு ரொம்பவும் கிராக்கி செய்கிறாராம்.

அதாவது, இந்த பிரபலம் ஹோட்டல்களுக்குச் சென்று உணவுகளை சாப்பிட்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் இப்படி அடைந்த பிரபலத்தை பயன்படுத்தி பல திரைப்படங்களுக்கு புரோமோசன்களும் செய்தார். திரைப்படங்களுக்கு புரோமோசன்கள் செய்ததால் அவரது யூடியூப் சேனலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் கிட்டத்தட்ட சினிமா செலிபிரிட்டி போலவே ஓவர் ஆட்டம் ஆடத் தொடங்கியுள்ளார் இந்த பிரபலம்.

Tamil Cinema Gossip Social Media Influencer Asking 3 Lakhs For 10 Mins Paid Promotion

அட்ராசிட்டி: தமிழ் படங்கள் , வெளி மொழிப் படங்கள் என பலவற்றிக்கு புரோமோசன்கள் செய்து, மார்க்கெட்டில் தனது மதிப்பை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்துள்ளார். இப்போது இவரது ஆரம்ப கால வேலையான உணவுகளை சாப்பிட்டு ரிவியூவ் செய்ய அழைத்தால் இந்த பிரபலம் தொடக்கத்தில் 5 லட்சம் கேட்டுள்ளார். அதையும் பல ஹோட்டல் நிறுவனங்கள் கொடுத்துள்ளது. இதற்கிடையில் தனக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் இவரது அட்ராசிட்டி பொது வெளியிலேயே அதிகமானதால் இவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை உடனே குறைய தொடங்கியது.

10 நிமிடத்திற்கு 3 லட்சம்: இதனால் தற்போது ஒரு வீடியோவுக்கு ரூபாய் 3 லட்சம் வரை வேண்டும் எனக் கேட்கிறாராம். இது மட்டுமல்லாமல், அந்த மூன்று லட்சத்திற்கும் 10 நிமிட வீடியோ, 3 ஷாட்ஸ் மற்றும் ஒரு கோலப் மட்டும் தான் செய்வேன் என ரொம்பவும் கிராக்கி செய்கிறாராம் இந்த யூடியூபர். இதை கேள்விப்பட்டவர்கள் பணம் வந்துவிட்டால் தான் வந்த பாதையை மறந்து விடுவார்கள் போல என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X