ஷூட்டிங் ஸ்பாட்டில் முறைத்துக் கொள்ளும் நடிகர்கள்.. நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் இயக்குநர்!
சென்னை: இந்த இயக்குநர் தனது கடைசி படத்தில் கொடுத்த வெற்றி அவருக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தது. காரணம் அவர் அந்த படத்திற்காக பல ஆண்டுகள் மெனக்கெட்டு ஆய்வுகள் செய்து கதையை உருவாக்கி, கதாபாத்திரங்களை சரியாக வடிவமைத்து, திரைக்கதையில் திருப்தியான படத்தைக் கொடுத்தார். இப்படி இருக்கையில் இவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் இரண்டு பெரிய கதாநாயகர்கள் நடித்துக் கொண்டு உள்ளனர்.
இதில் தமிழில் இருக்கும் ஒரு வாரிசு நடிகர் தான் கதாநாயகன் என்றாலும், மற்றொரு கதாபாத்திரத்தில் தமிழில் இருக்கும் நடிகரை யாரையாவது நடிக்க வைக்கலாம், இல்லை என்றால் மூத்த இயக்குநர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் இயக்குநரோ, ஒரு மலையாள நடிகரின் பெயரைச் சொல்லி, அந்த நடிகர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறி உள்ளார்.
இப்படி இருக்கையில் நடிகரோ மலையாள நடிகர் வந்தால் படப்பிடிப்புத் தளத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்காது. எனவே நாம் அந்த நடிகரை வேண்டாம் என்று கூறிவிடலாம் என்று பிளான் போட்டாலும், இது வெளியே தெரிந்தால், பிற்காலத்தில் பிரச்னையாகிவிடுமோ என்று யோசித்தவர், மலையாள நடிகரிடம் கதையைச் சொல்லுங்கள், அவருக்கு ஓ.கே. என்றால் எனக்கு ஓ.கே என்று கூறியுள்ளார்.

மலையாள நடிகர்: இந்த கதைக்கு அந்த மலையாள நடிகர் சரி என்று சொல்ல மாட்டார் என்று நம்பி, இயக்குநரிடம் இது போல கூறி உள்ளார் இந்த வாரிசு நடிகர். ஆனால் மலையாள நடிகரோ இயக்குநரின் முந்தைய படத்தை பாராட்டிவிட்டு, கதையே சொல்ல வேண்டாம், நான் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.
அவதிப்படும் இயக்குநர்: தற்போது படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒரு காட்சியில் இருந்த சில வசனங்களை வாரிசு நடிகர் மாற்றவே, இது தெரிந்து மலையாள நடிகர் உதவி இயக்குநர்களிடம் ரெய்டு விட்டுவிட்டாராம். இப்படி இருக்கையில் வாரிசு நடிகரின் படமும் மலையாள நடிகரின் படமும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளதால், இருவரும் கடைசியாக நடைபெற்ற படப்பிடிப்பில் சில நாட்கள் பேசிக் கொள்ளவே இல்லையாம். இதனால் இயக்குநர் என்ன செய்வது என்று தெரியாமல் தனது உதவி இயக்குநர்களை வைத்து எப்படியோ படப்பிடிப்பு பணிகளை நடத்தி வருகிறாராம். சீக்கிரமே படத்தை முடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறாராம் இயக்குநர்.


Click it and Unblock the Notifications