அண்ணன் மாதிரி நினைத்தேன்.. எல்லை மீறிட்டாரு.. அரசியல் புள்ளியால் மன வேதனையில் சின்னத்திரை நடிகை!
சென்னை: அரசியலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் பாராட்டுகளும் வரும், அதே நேரத்தில் விமர்சனங்களும் வரும். ஆனால், கருத்து வேறுபாடு என்ற பெயரில் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.
சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் சின்னத்திரை நடிகை ஒருவர், சமீபத்தில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலில் கடும் மனவேதனைக்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடன் ஒரே அரசியல் சிந்தனையில் இருப்பதாக நினைத்த ஒருவர், விவாதம் சூடுபிடித்த நிலையில் எல்லை மீறி மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது.

ஆபாச வார்த்தைகளால் விமர்சனம்: அந்த நடிகை பேச முயன்ற ஒவ்வொரு முறையும், அவரது கடந்தகாலத்தை இழுத்து வந்து கேலி செய்ததுடன், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து விமர்சித்தது மட்டும் இல்லாமல், மிகவும் ஆபாசமாகவும் பேசியதாக அந்த இணையவழி உரையாடலைக் கேட்டவர்கள் கூறி வருகின்றனர். "கருத்தை எதிர்க்கலாம்.. ஆனால் ஒரு பெண்ணை இப்படி அவமானப்படுத்த வேண்டுமா? இத்தனைக்கும் இருவரும் ஒரே கட்சிக்குத்தான் சப்போர்ட் செய்கிறீர்கள், அப்படி இருக்கும்போது இவ்வளவு மோசமாக பேசவேண்டுமா?" என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
இதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்பிங்ஸும் தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள், "ஒரே அணியில் இருப்பவர்களுக்குள்ளேயே இப்படியா?", "அரசியல் பேசுறதுக்கும், ஒருவரை தரம் தாழ்த்தி பேசுறதுக்கும் வித்தியாசம் இருக்கு", "கருத்து சுதந்திரம் வேறு... தனிமனித தாக்குதல் வேறு" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மன வேதனை: இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அந்த நடிகை மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும், இனி எந்த விவாத மேடையில் பேசுவது என்ற விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க முடிவு செய்துள்ளதாகவும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது. ஒரு காலத்தில் அண்ணன் போல மதித்து பழகிய நபரிடமிருந்தே இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருப்பது தான் அவரை அதிகம் காயப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications