எல்லாம் பணம் படுத்தும் பாடு.. மாஸ் நடிகரின் ரசிகர்களை கவர் செய்ய டாப் நடிகர் போட்ட பிளான்

By Staff

சென்னை: மாஸ் நடிகரும் டாப் நடிகரும் திரை வாழ்க்கையில் சரியான போட்டியாளர்கள் தான். ஒரு காலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி மறைமுகமாக எல்லாம் விமர்சித்து கடும் போட்டி போட்டு வந்தார்கள். ஆனால் இன்றைக்கு இருவருக்கும் இடையில் போட்டி குறைந்துவிட்டது. இப்படி இருக்கையில் மாஸ் நடிகர் ஆட்டத்தில் இருந்து கழன்று கொள்கிறார். எனவே அவரது ரசிகர்களை கவர் செய்ய, டாப் நடிகர் செய்துள்ள விஷயங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது மாஸ் நடிகர் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் காலடி எடுத்து வைத்துவிட்டார். இவரது கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இப்படி இருக்கையில் மாஸ் நடிகரோ தன் மீது எந்த தவறும் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறார். அவரது ஆதரவாளர்களும் நடிகர் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, டாப் நடிகர் அளித்த பேட்டியில் மக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார்.

Tamil Cinema Gossip Top Actor Who Plans To Mass Actor Fans

அடேங்கப்பா விளக்கம்: அதில் டாப் நடிகர் மாஸ் நடிகருக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்று பலரும் தகவலை பரப்ப, உடனே டாப் நடிகர் ஐய்யயோ, அம்மம்மா நான் மாஸ் நடிகருக்கு எதிராக எதுவும் சொல்லலைங்க. யாரோ விஷமிகள் எனக்கு எதிராக சதி திட்டம் போடுறாங்க. நான் எப்பவும் மாஸ் நடிகருக்கு நல்லது தான் நினைச்சு இருக்கேன். அவரோட குடும்பத்திற்கும் நல்லது தான் நெனச்சு இருக்கேன். என்னோட ரசிகர்களுக்கும் மாஸ் நடிகரின் ரசிகர்களுக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க பார்க்கிறார்கள் என்று பதறியடித்து விளக்கம் கொடுத்தார்.

பணமும் பிசினஸும்: நடிகர் இந்த விளக்கம் கொடுப்பதற்கு முன்னர் வரை சமூகத்தில் ஒரு நல்ல அபிப்ராயத்தைப் பெற்றிருந்தார். ஆனால் இந்த விளக்கத்திற்குப் பிறகு டாப் நடிகரின் மீதான பார்வை கொஞ்சம் மாறியுள்ளது. இப்படி இருக்கையில் நடிகரின் விளக்கத்தைப் பார்த்தால் மாஸ் நடிகரின் ரசிகர்கள் டாப் நடிகருக்கு ஆதரவு அளித்தால் எதிர்காலத்தில் அவரது படத்திற்கு மாஸ் நடிகரின் ரசிகர்கள் ஆதரவு கிடைத்தால் பிசினஸ் பெரிதாக மாறும் என்று கணக்குப் போட்டு தான் நடிகர் இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X