மாஸ் நடிகரை அட்டாக் செய்து ஒற்றை அறிக்கை.. ரசிகர்களை உஷாராக்கிய டாப் நடிகர்.. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!
சென்னை: மொத்த கோலிவுட்டும் தற்போது ஒரு விஷயத்தைப் பற்றித்தான் காதும் காதும் வைத்தது போல பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதாவது, மாஸ் நடிகர் தனது ரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தில் லைட்டாக எல்லாம் இல்லாமல் கொஞ்சம் ஹெவியாகவே மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். நன்றி சொல்ல எழுதிய கடிதத்தில் எதற்காக இந்த நடிகர் இப்படி அட்டாக் செய்துள்ளார் என்ற பேச்சுத்தான் கோலிவுட்டில் ஓடிக் கொண்டு உள்ளது.
இந்த மாஸ் நடிகருக்கும் டாப் நடிகருக்கும் இடையில் ஆகவே ஆகாது. இவர்களுக்குத்தான் ஆகவில்லை என்றால் இவர்களின் ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம், எல்லாம் ஏழாம் பொருத்தம்தான். இப்படி இருக்கும்போது மாஸ் நடிகர் ஒரு நாள் தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது மட்டும் இல்லாமல் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக அறிவித்துவிட்டார்.

கடிதம்: அடுத்த ஆண்டு மாஸ் நடிகர் முதல் தேர்தலைச் சந்திக்க உள்ளார். இப்படி இருக்கும்போது, டாப் நடிகர் தனது ரசிகர்களுக்கு நீங்க இல்லையினா நான் இல்லை, நான் இன்னைக்கு இப்படி இருக்க காரணமே நீங்கதான் என்றெல்லாம் ஆஹா.. ஓஹோ என எழுதி நன்றி தெரிவித்திருந்தார். டாப் நடிகர் தனது ரசிகர் மன்றத்தை கலைத்த பின்னர் ஒருபோதும் இப்படி ரசிகர்கள் குறித்து உருகி உருகி கடிதம் எழுதியதில்லை.
காரணம்: ஆனால் இந்த முறை அவர் அப்படி எழுத காரணமே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தான் எனக் கூறப்படுகிறது. அதாவது. தனது ரசிகர்கள் இந்த மாஸ் நடிகரின் கட்சிக்கு தெரிந்தோ தெரியாமலோ ஆதரவு தெரிவித்து விடக் கூடாது என்பதை நோக்கத்தில் கொண்டுதான் டாப் நடிகர் இப்படியான அறிக்கையை வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், திரையுலகிலும் அரசியல் வட்டாரத்தில் பேச்சாக உள்ளது.
தேர்தலுக்குள்: டாப் நடிகரிடம் இருந்து இப்படி ஒரு கடிதம் வரும் என மாஸ் நடிகரும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் எதிர்பார்க்க வில்லையாம். இப்போது தேர்தலுக்குள் இன்னும் இப்படி என்ன மாதிரியான விஷயங்களை எல்லாம் நாம் எதிர் கொள்ள போகிறோம் என மஸ் நடிகரும் அவரது கட்சியினரும் குழப்பத்தில் இருக்கிறார்களாம். தேர்தலுக்குள் டாப் நடிகர் இன்னும் இரண்டு மூன்று அறிக்கைகள் விட்டால் அது கட்டாயம் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











