பிரபலத்திற்கு நடந்த கப்சிப் திருமணம்.. வயித்துல புள்ள பூச்சியாமே.. ஊரெல்லாம் பேச்சு!
சென்னை: இந்த பிரபலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும் இப்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள என்ன காரணம்? முதல் திருமணம் என்னதான் ஆச்சு என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இப்படியான நிலையில் பிரபலம் குறித்து பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்.
இந்த பிரபலம் தான் வேலை செய்யும் இடத்திலேயே ரொம்பவும் ஓவராகத்தான் நடந்து கொள்வாராம். இவர் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர்ந்த பின்னர், அவருக்கு முன்னால் இருந்த சீனியரையே ஓட விட்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பிரபலத்திற்கு அந்த அளவுக்கு தொலைக்காட்சி நிறுவனத்தில் முக்கியத்துவம் கொடுக்க காரணம், அங்கிருக்கும் ஒரு மேல் அதிகாரியை தன் வலையில் வீழ்த்தி விட்டாராம். மேல் அதிகாரி இந்த பிரபலத்தை தன் வலையில் வீழ்த்த முயற்சி செய்துள்ளார், ஆனால் இறுதியில் பிரபலம்தான் மேல் அதிகாரியை வலையில் வீழ்த்தி உள்ளார்.
இவர் ஏற்கனவே ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் சந்தோஷமாகத தான் வாழ்ந்து வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் கணவர் மீது இண்ட்ஸ்ரஸ்ட் போக, இருவருக்குள்ளும் சண்டைகள் தினம் தினம் வந்துள்ளது. பல நேரங்களில் இருவருக்கும் இடையில் கைகலப்பு எல்லாம் நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது. ஓரளவுக்கு பொறுத்துப் பார்த்த காதல் கணவர், இனி இது சரிப்பட்டு வராது, நமக்கு உசுரு முக்கியம் என ஒரு பெரிய சண்டையில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாராம்.

முதல் திருமணம்: இருவரும் திருமணம் செய்து கொண்டாலும், அதை முறையாக பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. எனவே, பிரியும்போது விவாகரத்து என எதுவும் தேவைப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பிரிந்து சென்ற கணவர், நான் இனிமேல் உன் வாழ்க்கையில் வரவே மாட்டேன், என உறுதியாக கூறியதாகவும் கூறப்படுகிறது. விவாகரத்து பெற்று விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
புள்ள பூச்சி: இதற்கிடையில் பிரபலத்திற்கு இசைத்துறையில் வேலை செய்யும் ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியே தனிக்கட்டையாக இருந்தால் என்ன செய்வது, சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இவரும் அந்த இசை துறையைச் சேர்ந்தவரும் நன்றாக பேசி பழகி உள்ளார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார்கள். அவர்களின் நெருக்கம் புள்ள பூச்சியைக் கொண்டுவந்து கொடுத்துள்ளது.
திருமணம்: இதனைக் கலைத்துவிடலாம் என இருவரும் முடிவு செய்துள்ளார்கள். ஆனால் பிரபலத்தின் உடல்நிலை மற்றும் வயதை கணக்கில் பார்த்த மருத்துவர்கள், இதைக் கலைத்தால் இனி மறுபடியும் உங்களுக்கு உண்டாகுமா என்பது சந்தேகம் தான் எனத் தெரிவித்துள்ளார்கள். அதன் பின்னர்தான் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்களாம். மேலும் இவர்களின் திருமணம் குறித்து வெளியே முன்னரே சொன்னால் தேவையில்லாமல் முதல் திருமணம் குறித்து கிளறுவார்கள், எனவே திருமணம் குறித்து நெருங்கிய வட்டத்தினருக்கு மட்டும் சொல்லியுள்ளார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள், இந்த காலத்து ஆட்களுக்கு எல்லாத்துக்கும் அவசரம் எனவும், எது எப்படியோ நன்றாக இருந்தால் போதும் என பேசி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











