ரூ. 100 கோடிகள் செலவு செய்தும் நடிகரைப் பார்க்க முடியாமல் தவிக்கும் பிரபலம்.. ஒரே கஷ்டமப்பா!
சென்னை: இந்த நடிகர் சினிமா உலகிலேயே ரொம்பவும் கிராக்கியான நடிகர். இவரது படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற பின்னர், ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்தது. வெற்றியும் பணமும் புகழும் கொடுத்த போதையும் மமதையும் அவரது இன்றைய நிலைக்கு காரணமாக உள்ளது. இப்படி இருக்கும்போது இவரது நலனுக்காக சுமார் ரூபாய் 100 கோடிகள் வரை செலவு செய்த பிரபலம் ஒருவரால், நடிகரை தனியாக சந்தித்து பேசும் வாய்ப்புகளே கிடைக்கவில்லையாம்.
அதாவது இந்த நடிகர் படங்களிலேயே அசலாட்டாக 200 கோடிகள் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தவர். இப்படி இருக்கும்போது, இவர் சினிமா எல்லாம் வேண்டாம் நான் அரசியலுக்கு போய் மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று முடிவெடுத்து, தனது ரசிகர்கள் பட்டாளத்தை அப்படியே தனது அரசியல் அத்தியாயத்தின் தொடக்க காலத்திற்கு பயன்படுத்தி வருகிறார். இது எல்லாம் ஒரு புறம் இருக்க, இருக்கின்ற அரசியல் கட்சிகளை விமர்சித்துவிட்டு கட்சி தொடங்கியுள்ள இந்த நடிகர், மாற்றுக் கட்சியில் இருந்து யார் தனது கட்சியில் வந்து இணைந்து கொண்டாலும், சேர்த்துக் கொள்கிறாராம். இதுவே அந்த நடிகர் மீது இருக்கும் பெரிய விமர்சனமாக இருக்கிறது.

ரூபாய் 100 கோடி செலவு: நடிகர் இப்படி எல்லாம் நடந்து கொள்ள காரணமே அவரது அரசியல் ஆலோசகரின் பெயரைக் கேட்டுத்தானாம். இப்படி இருக்கும்போது நடிகரின் கட்சிக்கு மாற்றுக் கட்சியில் இருந்து வந்து இணைந்து கொண்ட முக்கியப் புள்ளி ஒருவர், பல ஆயிரம் கோடிகளின் அதிபதி வீட்டு மாப்பிள்ளை. நடிகர் கட்சியில் இணைந்த பின்னர் சுமார் 100 கோடிகளுக்கு மேல் இதுவரை கட்சிக்காக செலவு செய்துள்ளாராம். இப்படி இருந்தும் நடிகரைச் சந்தித்து, அதுவும் தனியாக சந்தித்து பேசும் வாய்ப்புகள் கிடைக்கவே இல்லையாம்.
அதிருப்தி: இது அந்த பிரபலத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். இந்த விவகாரம் தற்போது உட்கட்சி அளவில் கொஞ்சம் புகைச்சலையும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் கொஞ்சம் பிளவையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று பலரும் பேசி வருகிறார்களாம். ஆனால் நடிகரோ இதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











