எனக்கு சீனியர் ஹீரோயின்தான் வேணும்.. பல நாள் ஆசையை அடைய...அடம் பிடிக்கும் இளம் நடிகர்!

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது புது முக நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது. மேலும் வார வாரம் ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே உள்ளது. பல முன்னணி நடிகர்களே, ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று படங்களில் நடித்து மார்க்கெட்டில் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் கால கட்டமாக உள்ளது. இப்படியான நிலையில் ஒரு இளம் நடிகர் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறக்க மேற்கொண்டுள்ள முயற்சிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நடிகர் பெரிய முதலாளி என்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானாலும், அதற்கு முன்னர் ஓரளவிற்கு சீரியல் ரசிகர்களிடம் அறிமுகமானார். இப்படி இருக்கும்போது, பெரிய முதலாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு அவருடன் கலந்து கொண்ட மூன்று பெண் பிரபலங்களிடம் காலை, மாலை, இரவு என நெருங்கிப் பழகினார். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே, அவர் செம பிளானோடு வந்துள்ளார்.

Tamil Cinema Gossip Cinema Gossip Kollywood Gossip

அப்படி இருக்கும் போது, மூன்று பெண் பிரபலங்கள் லட்டு போல இறங்கியதால், மூன்று பேரையும் ஒரே நேரத்தில் சமாளித்து வந்தார். அந்த மூன்று பேரில் இருவருக்கு இடையில் இவருக்காக சண்டையே வந்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து சினிமாவில் கதாநாயகன் ஆகிவிட வேண்டும் என தீர்மானித்த நடிகர், இப்போது கதாநாயகனாகவும் மாறிவிட்டார்.

இளம் நடிகர்: ஆனால், சினிமாவில் கதாநாயகன் ஆவதை விட, சினிமாவில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க தொடர்ந்து நீடிக்க சில சூட்சுமங்களை கையில் எடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதாவது, ஏற்கனவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர், சீனியர் நடிகைகளுடன் நடித்து தான் தன்னை பெரிய கதாநாயகனாக மாற்றியுள்ளார். இப்போது அந்த சீனியர் கதாநாயகிகளை கழட்டி விட்டுவிட்டு இளம் கதாநாயகிகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

சீனியர் நடிகைகள்: அப்படி இருக்கும்போது, இந்த நடிகரும் சீனியர் கதாநாயகிகளுடன் நடிக்க முடிவு செய்துள்ளார். தான் முக்கிய கதாநாயகன், பெரிய கதாநாயகன் என்ற பிம்பத்தை உருவாக்க சீனியர் நடிகைகளை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க கமிட் செய்யுங்கள் என இயக்குநரிடமும், தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறாராம். இவரது இந்த கண்டிசனால், இயக்குநரும் தயாரிப்பாளரும் என்ன செய்வது எனத் தெரியாமல் புலம்பி வருகிறார்கள்.

கழட்டி: நடிகரின் இந்த பிளான் வேற லெவலில் இருக்கே, நாம் எப்படி இப்படியான பிளானை தவறவிட்டோம் என இவருக்கு முன் சினிமாவில் இருக்கும் சில நடிகர்களே இப்போது யோசித்து வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். ஆனால் இந்த நடிகர் இப்படியே முரண்டு பிடித்துக் கொண்டு இருந்தால், நடிகரை கழட்டி விடவும் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதேநேரத்தில் நடிகருக்கு நெருக்கமானவர் ஒருவர் தயாரிப்பு வட்டத்தில் இருப்பதால், தயாரிப்பாளரிடம் மெல்ல மெல்ல நடிகைகளை கமிட் செய்தால் பிசினஸில் ரெவன்யூ பார்த்துவிடலாம் என கூறி வருகிறாராம். இந்த விஷயம் நடிகருக்கு தெரியவந்ததால், தற்போது அவரும் அடக்கி வாசித்து வருகிறார் என கூறப்படுகிறது. விஷயம் தெரிந்தவர்கள் இது எல்லாம் எங்க போய் முடியுமோ என பேசி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X