என் பொண்டாட்டி கையை விடுங்கடா.. யூடியூபர் பார்த்த கேவலமான வேலை.. காசு வந்ததும் ஓவர் ஆட்டம்
சென்னை: இந்த யூடியூபர் ஆரம்பத்தில் மிகவும் பவ்யமாக இருந்தவர்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவரது யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைபர்கள் வர வர அவரது ஆட்டம் ரொம்பவும் ஓவரா மாறிவிட்டது. குறிப்பாக இவர் செய்த பல சர்ச்சையான விஷயங்கள் அவர் மீது அதிருப்தி ஏற்படச் செய்தது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அவரது மனைவியுடன் இணைந்து கொண்டு செய்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல யூடியூபர்கள் தங்களது யூடியூப் சேனலை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த மிகவும் போராடுவார்கள். இவரும் அப்படித்தான் போராடினார். இப்போது இவரது யூடியூப் சேனலுக்கு பல லட்சக் கணக்கில் சப்ஸ்கிரைபர்கள் உள்ளார்கள். யூடியூப் சேனலுக்கு பல லட்சங்கள் சப்ஸ்கிரைபர்களும் மாதத்திற்கு பல லட்சங்கள் வருமானம் யூடியூபில் வருவதால் பணம் வர வர யூடியூபருக்கு தான் ஒரு குறுநில மன்னர் என்ற மனநிலை வந்துவிட்டது.
சர்ச்சை: அதாவது, மக்கள் மத்தியில் ஒரு பிரபலமாக மாறிவிட்ட இந்த குறுநில மன்னருக்கு அரசியல் ரீதியாகவும் தொடர்புகள் கிடைத்து விட்டதால், இப்போது ஓவர் ஆட்டம் போடுகிறார். அதாவது, இந்த குறுநில மன்னர் மீது ஏற்கனவே பல சர்ச்சைகள் உள்ளது. அதாவது கார் ஓட்டிச் சென்று ஒருவர் மீது மோதிவிட்டு வண்டியை நிறுத்தாமல் வந்தது. வண்டியை நிறுத்தாமல் வந்த பின்னர், நான் வண்டியை ஓட்டவில்லை, நானே குறுநில மன்னன் என்னுடைய டிரைவர் தான் வண்டியை ஓட்டினார் எனக் கூறி தப்பித்தார். இப்படி இவர் மீது பல சர்ச்சைகள் உள்ளன.

குறுநில மன்னர்: எவ்வளவு சர்ச்சை வந்தாலும் அதில் இருந்து எல்லாம் அசால்ட்டாக தப்பித்துவிடுகிறார் இந்த யூடியூபர். இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் காரில் நகர்வலம் சென்றுள்ளார். இவர் குறுநில மன்னர் என்பதால் ஏற்கனவே அவரது காரில் ஏழைகளுக்கு உதவ பொருட்கள் இருந்துள்ளது. உடனே இவரும் இவரது மனைவியும் ஏழைகளைப் பார்த்து, பரிதாபப்பட்டு உதவி செய்ய முடிவெடுத்துள்ளார்கள். இதனால் தங்களது காரை ஆங்காங்கே ஓரம் நிறுத்தி ஏழைகளுக்கு பணம் மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளார்கள்.
விமர்சனம்: அப்போது சில ஏழைகள், குறுநில மன்னர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரியாமல், காருக்குள் எல்லாம் கைவிட்டு உதவிப் பொருட்களை பெற்றுள்ளார்கள். மேலும் அவரது மனைவியின் கையை தொட்டுவிட்டார்களாம். இப்படியான நிலையில் குறுநில மன்னருக்கு கோபம் வந்து, ஏழைகளைப் பார்த்து கடுமையாக திட்டியுள்ளார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட இணையவாசிகள், குறுநில மன்னனுக்கு, தான் கடந்து வந்த பாதை தெரியவில்லை போல, இது மட்டும் இல்லாமல் இப்போது ஓவர் ஆட்டம் போடுகிறார் என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் வரும் காலங்களிலாவது பணத்திமிருடன் நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











