என்றோ பேசிய பேச்சு.. ரவுண்டு கட்டும் விஷமிகள்.. நின்னு விளையாடும் நடிகர் கணவரும் நடிகை மனைவியும்!
சென்னை: இவர்கள் தமிழ் சினிமாவிலேயே பலருக்கும் பிடித்த காதல் ஜோடி மட்டும் இல்லாமல் தம்பதியர்கள். இருவரும் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகையாக இருந்து, இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் இப்போது ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் நிம்மதியை கெடுக்கவே சில விஷமிகள் வேலை பார்த்து வருகிறார்கள் என்று கூறலாம்.
ஏற்கனவே கூறியது போல் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மிகவும் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையில் இருக்கிறார்கள். இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருகிறார். அவரது படத்திற்கு தனி வரவேற்பு ரசிகர்கள் பட்டாளமும் பிசினஸ்ஸும் உருவாகியுள்ளது.
இந்த தம்பதியர் இருவரும் படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களாக உள்ளார்கள். இதனாலோ என்னவோ சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்கிற, அவர்களே நேரடியாக அனுபவப்படுகிற விஷயங்கள் குறித்து மிகவும் தைரியமாக பேசி வருகிறார்கள். அவர்களின் சமூக அக்கறையும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் தைரியமும் சிலருக்குப் பிடிக்கவில்லை. இதனாலோ என்னவோ, அவர்கள் படம் ரிலீஸ் ஆகும்போது அந்த சிலர் கொஞ்சம் வேலையைக் காட்டத் தொடங்கி விடுகிறார்கள்.

பேச்சு: அதாவது அவர்களின் படம் ரிலீஸ் ஆகும்போது, அவர்களின் படங்களுக்கு எதிராக மோசமான கருத்துக்களை பரப்புவது, படம் நன்றாக இல்லை, இந்த படத்திற்கு போவதற்கு பதிலாக படத்திற்கு போகாமலே இருக்கலாம் என்று கூறுவது என அவர்களுக்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு பின்னால் இரண்டு அரசியல் கட்சிகள் இருப்பதாக கூறினாலும், அதைக் கண்டு இருவரும் அஞ்சாமல், நின்று விளையாடிக் கொண்டு உள்ளார்கள். இவர்களுக்கு எதிராக இப்படி நடந்து கொள்ள காரணம், சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பொதுவெளியில் பேசிய பேச்சுகள் என்று கூறப்படுகிறது.
டார்கெட்: அதாவது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது மட்டும் இல்லாமல், சினிமாவில் அவர்களுக்கு மதிப்பைக் கூட்டிக் கொண்டு வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் இவர்களுக்கு சமூகத்திலும் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே உள்ளது. இவர்களை காலி செய்ய நினைத்த சிலரோ இப்போது டயர்ட் ஆகி விட்டார்களாம். ஆனாலும் மேலிடத்தில் இருந்து இந்த அசைன்மெண்ட் கொடுத்துள்ளார்கள் அதை எப்படியாவது முடிக்க வேண்டும் அல்லது, அதற்கான முயற்சியில் இருக்கிறோம் என்ற பாவலா காட்ட வேண்டும் என்று, படங்கள் ரிலீஸ் ஆகும்போது மட்டும் தலையைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்களாம். விஷயம் தெரிந்தவர்கள் அந்த நடிகையையும் நடிகரையும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











