ஒல்லி நடிகரின் தலையில் மொய் எழுத தயாரிப்பாளர் பிளான்.. முடிஞ்சத பாத்துக்கோ என மிரட்டி விட்ட நடிகர்!

By Staff

சென்னை: இந்த நடிகர் என்னதான் திறமையான நடிகராக இருந்தாலும் அவரது படங்களில் அவரது நடிப்பு குறித்து பலரும் பாராட்டி பேசுவதைக் காட்டிலும் இவரைச் சுற்றி நடக்கும் பல சர்ச்சைக்குரிய சம்பவங்களால் அதிகம் கவனிக்கப்படுகிறார். அப்படியான சம்பவம் ஒன்று தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் சுற்றி வருகிறது.

இந்த நடிகர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது பலரும் தாக்கு பிடிப்பாரா என்ற கேள்வியை முன் வைத்தார்கள். ஆனால் நடிகர் இப்போது கண்டம் விட்டு கண்டம் தாண்டி போய் நடிக்கும் அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நடிகர் இயல்பாகவே செம பிஸியான நடிகர் தான் என்பது திரைத்துறையில் உள்ள பலருக்கும் தெரியும். மேலும் மார்க்கெட்டில் லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் அளவிற்கு இவரது படங்கள் உள்ளதால், நடிகரை நம்பி பலரும் பணம் செலவிட தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்கள்.

இப்படியான நிலையில், சில தயாரிப்பாளர்கள், நடிகர் செம பிஸி எனத் தெரிந்து கொண்டு அவரிடம் கால்ஷீட் கேட்டு போய்விடுகிறார்கள். இப்படிப் போகும் பல தயாரிப்பாளர்களை நடிகர் வெறும் கையுடன் அனுப்பிவிடுகிறார். காரணம், நடிகர் கமிட் ஆகி உள்ள படங்கள் மட்டும் இல்லாமல், படங்களை இயக்கவும் செய்கிறார் என்பதுதான் காரணமே. யார் வந்தாலும் மிகவும் உறுதியாக நோ சொல்லி விடுகிறார். அப்படி இருந்தும் சில தயாரிப்பாளர்கள், நடிகரிடம் அட்வான்ஸ் தொகையை ஒட்டவைத்து விட்டால், அவர் எப்படியும் நமக்கு கால்ஷீட் கொடுத்துதான் ஆகவேண்டும் என திட்டமிட்டு ரூபாய் 5 கோடிகள் வரை அட்வான்ஸ் கொடுத்துவிடுகிறார்கள்.

Tamil Cinema Gossips Actor Who Gives Warning To Producer For Money Issues

பிரச்னை: இப்படி அட்வான்ஸ் கொடுப்பவர்களிடம், நீங்கள் முதலில் கதையைக் கேளுங்கள், அது உங்களுக்கு பிடித்தால், என்னிடம் அனுப்புங்கள் நான் கேட்டுவிட்டு முடிவு செல்கிறேன் எனக் கூறி விடுகிறார். இப்படி சில தயாரிப்பாளர்களுக்கு நடிகர் படம் நடித்துக் கொடுத்துள்ளார். இப்படியான ரூட்டை பின்பற்றிய ஒரு தயாரிப்பாளர், நடிகருக்கு ரூபாய் 3 கோடிகள் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அவர்கள் அனுப்பும் இயக்குநர்கள் சொல்லும் கதைகளின் மேல், நடிகருக்கு நம்பிக்கை ஏற்படாததால், நோ சொல்லி வந்துள்ளார்.

பஞ்சாயத்து: இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பு தரப்பு நடிகர் எங்களுக்கு படமே பண்ண வேண்டாம், நாங்கள் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்க சொல்லுங்கள் எனக் கூறி பஞ்சாயத்து செய்துள்ளார்கள். பஞ்சாயத்து பேசியவர்கள், வட்டி போட்டு நீங்கள் சொல்லும் அளவுக்கு பணம் வாங்கித் தர முடியாது, வேண்டுமென்றால், பேசி பணத்தை கூடுதலாக கொடுக்க சொல்லுகிறோம் எனக் கூறியுள்ளார்கள். ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.

மிரட்டல்: விஷயம் நடிகரின் கவனத்திற்கு போனதும், நான் இந்த அளவுக்கு பணத்தை கூடுதலாக கொடுக்கிறேன் என்று கூறியதே பெரிய விஷயம், அப்படி இருக்கும்போது, அவர்கள் இந்த அளவுக்கு ஆட்டம் போடுகிறார்கள் என்றால், அவர்கள் என்னை மிரட்டி பார்க்க நினைக்கிறார்களா? என கோபமாகியுள்ளார். மேலும் இதுக்கு மேல 10 பைசா கூட கொடுக்க முடியாது, முடிஞ்சத பாத்துக்க சொல்லுங்க எனவும் பதிலுக்கு மிரட்டி விட்டுள்ளாராம். விவரத்தை கேள்வி பட்டவர்கள், நடிகரின் தலையில் மொய் எழுத பார்த்த தயாரிப்பாளருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என பேசிக்கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X