படம் சூப்பர் டூப்பர் ஹிட்..நடிகைக்கு விபூதி அடித்த இயக்குநர் மற்றும் நடிகர்.. தப்பு பண்ணிட்டாங்களாம்
சென்னை: இந்த ஆண்டில் வெளியான படங்களில் பல படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகி வருகிறது. இதுவரை வெளியான படங்களில் சில படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக மாறியது. போட்டிகள் நிறைந்த சினிமா உலகில் ஒரு படம் வெற்றி பெறுகிறது என்றால், அந்த படத்தில் நடித்த கதாநாயகன், கதாநாயகி என அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் நடித்த கதாநாயகி மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம். அதற்கு காரணம் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் என்கிறது சினிமா வட்டாரம்.
இந்த நடிகை பக்கத்து மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம். காரணம் அவரது தாய்மொழி படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், அதற்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. அப்படி இருக்கும்போது, தமிழ்நாட்டில் இந்த நடிகைக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு உள்ளது.

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வது பெரும்பாலான ரசிகர்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள் என கூறப்படுகிறது. இந்த நடிகை ரொம்பவும் இளம் நடிகை என்பதால் சினிமாவின் சூட்சுமங்கள் இன்னும் இவருக்குத் தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். அதிலும் நடிகைக்கு தமிழ் சினிமா வாசிகள் குறித்து கொஞ்சமும் புரிதல் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் நடிகை அவர் நடித்த தமிழ் படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் இப்போது இந்த படம் குறித்து பேசினால் செம டென்ஷன் ஆகிவிடுகிறாராம்.
ஏமாற்றம்: நடிகையைப் பொறுத்தவரையில் இந்த படத்தின் கதையை சொல்லும்போது படத்தில் இன்னொரு கதாநாயகி இருப்பதையே மறைத்து விட்டார்களாம். அதுவும் மற்றொரு கதாநாயகியின் போர்ஷனை மொத்தமாக மறைத்துள்ளார் இயக்குநர். நடிகரும் படம் குறித்து பேசும்போது நடிகையிடம் மற்றொரு கதாநாயகி போர்ஷன் குறித்து வாய் திறக்கவில்லையாம். இதனால் நடிகை படத்தில் நான் மட்டும்தான் கதாநாயகி என நினைத்து படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லிவிட்டார். ஆனால் படத்தில் இன்னொரு நடிகை நடிப்பதே படத்தில் இரு கதாநாயகிகளும் ஒரே காட்சியில் இருப்பது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது தான் தெரிந்ததாம்.
சந்தேகம்: மேலும் இந்த காட்சியை இயக்குநரும் நடிகரும் பிளான் செய்து கடைசியாக சூட் செய்தார்கள் என கூறப்படுகிறது. அதுவும் ஒரு காட்சிதான் என்பதால் நடிகை இது படத்தில் ஒரு காட்சி தானே என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் படத்தின் டீசர், டிரைலரை பார்க்கும்போது நடிகைக்கு சந்தேகம் ஏற்பட, அதை இயக்குநரிடம் கேட்டுள்ளார். அதற்கு இயக்குநர் படத்தின் ஃபைனல் கட் பாருங்கள் உங்களுக்கு படம் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
வருத்தம்: ஆனால் படத்தை பார்த்த நடிகைக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியுள்ளது. காரணம் படத்தின் பாதியில் வரும் மற்றொரு கதாநாயகிக்கு பாடல் காட்சிகள், ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் படியான காட்சிகள் என கொஞ்சம் கிளாமர் போர்ஷனும் கொடுத்துள்ளார்கள். இதனைப் பார்த்த நடிகை மொத்தமாக அப்செட் ஆகியுள்ளார். படம் இப்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. ஆனாலும் நடிகைக்கு படத்தின் வெற்றியால் கொஞ்சம் கூட மகிழ்ச்சி இல்லையாம். அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டேனே என வருத்தப்பட்டு வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











