தனிக்குடித்தனம் போனதில் இருந்து மாமனாரை அட்டாக் செய்யும் நடிகை மருமகள்.. நடிகர் புருஷன் தான் பாவமே!

By Staff

மும்பை: இந்த நடிகை தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிப்பில் பெயர் பெற்றவர். அறிமுகமாகி கொஞ்சம் வளர்ந்து வந்த காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். இவர்களின் கிசுகிசு தமிழ் சினிமா முழுவதும் நன்கு தெரிந்தது தான். இப்படி இருக்கும்போது, நடிகையை ஒரு மூத்த நடிகரின் மகன் காதலித்தார். காதலித்தவரும் நடிகர் தான் என்பதால் விஷயம் திரையுலகம் முழுவதும் பரவியது.

நடிகர் நடிகையை திருமணம் செய்வதிலும் நடிகை நடிகரைத் திருமணம் செய்வதிலும் உறுதியாக இருந்துள்ளார்கள். இது தொடர்பாக இருவரும் தங்களது பெற்றோர்களிடத்தில் பேசியுள்ளார்கள். இது நடிகரின் தந்தைக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. எனவே, நடிகரின் தந்தையான மூத்த நடிகர், அந்த புள்ளைய மறந்துட்டு, அம்மா சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கு, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு அந்த பொண்ணை கல்யாணம் செய்துக்க எனக் கூறியுள்ளார். நடிகர், ஒரே பேச்சில், சாரி டாடி, கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றதா இருந்தா சொல்லுங்க, இல்லைனா நான் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மகனின் இந்த பதிலை எதிர்பார்க்காத மூத்த நடிகருக்கு ஷாக். இறுதியில் தனது தலைமையில் திருமணம் செய்து வைத்தார். ஆனால் நடிகையை ஏற்றுக் கொள்ள மனமில்லை. நடிகை மீது கடுகடுப்பாகவே இருந்துள்ளார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்ட நடிகை, எப்படியாவது தனிக்குடித்தனம் போக வேண்டும் என பல ஆண்டுகளாக யோசித்து வந்துள்ளார். இப்படியான சூழலில் நடிகைக்கும் மாமனாருக்கும் இடையில் சண்டை முற்றிப் போய் உள்ளது. இதனால் மாமனார் எனது பேச்சைக் கேட்காதவர்கள் எனது வீட்டில் இருக்க கூடாது எனக் கூறினாராம். இதுதான்டா வாய்ப்பு என நடிகை மாமனார் கூறியதை பெரிது படுத்தி, தனது கணவரையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு தனிக்குடித்தனம் போயுள்ளார்.

Tamil Cinema Gossips Actress Who Social Media Posts Attack For her father-in- LAW

நடிகை: மேலும் யார் கேட்டாலும் குழந்தைகளுக்கு அங்கிருந்து ஸ்கூல் பக்கமாக உள்ளது. அதனால்தான் என வெளியே கூறி வந்துள்ளார்கள். இப்படி இருக்கும்போது நடிகை தனது மாமனாரை வெறுப்பேற்றவே தனது சமூக வலைதள பதிவுகளில் சில பதிவுகளை போட்டு வருகிறாராம். அதாவது, எந்த வீட்டில் இருக்க கூடாது எனக் கூறினாரோ, அதைவிட பல வசதிகள் கொண்ட வீட்டை வாங்கி, அதற்கு தனது பெயரையும் தனது கணவர் பெயரையும் சூட்டியுள்ளார்.

மாமனார்: இது மட்டும் இல்லாமல், அவ்வப்போது தனது போட்டோ சூட்களை நடத்தி அதற்கு கேப்ஷனாக மாமனாரை அட்டாக் செய்து பதிவிட்டு வருகிறாராம். அவர் போடும் கேப்ஷன்கள் எல்லாம் அவரது மாமனாரை அட்டாக் செய்வதற்காகத்தான் என ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வெளியாவதால், நடிகை அவற்றையெல்லாம் பார்த்து செம ஜாலியாக இருக்கிறாராம்.

கச்சேரி: நடிகையின் இந்த செயலைப் பார்த்து சிலர் நேரடியாக கேட்டுவிட்டார்களாம், அதற்கு நடிகையும் இதுவரைக்கும் பார்த்தது எல்லாம் சும்மாதான். இனிமேல் தான் இருக்கு கச்சேரி எனக் கூறினாராம். நடிகையின் இந்த பதிலை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம். மேலும் வழக்கமாக மாமியார் - மருமகள் சண்டை இருக்கும் ஆனால், இங்கு மாமனார் - மருமகள் சண்டை என்பது வித்தியாசமா இருக்கே என பேசி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X