கணவர் கண்டுகொள்வது இல்லையாம்.. ரூட்டை மாற்றிய இளம் நடிகை.. எங்க போய் முடியப்போகுதோ?

By Staff

சென்னை: இந்த நடிகை தென்னிந்திய சினிமாவில் கால் வைத்ததில் இருந்தே கவனத்தை ஈர்த்து வருகிறவர்தான். தனது ஆரம்பகால படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தார். ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தாலும் இவரது ரியாக்‌ஷன்ஸ் மற்றும் இவருக்கு அமைந்த பாடல்கள் நடிகையை பட்டிதொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தது. நடிகை சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். இப்படியான நிலையில் மார்கெட் நிலவரத்தை புரிந்து கொண்ட நடிகை தனது ரூட்டையே மாற்றிவிட்டாராம்.

அதாவது நடிகை வந்த புதிதில் மிகவும் சைலண்டாகத்தான் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொஞ்சம் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பின்னர், ஒரு நடிகருக்கு நடிகையை மிகவும் பிடித்துவிட்டது. அதனால் நடிகையை தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைத்து, தாங்கு தாங்கு என தாங்கியுள்ளார் நடிகர். இந்த விஷயம் நடிகரின் மனதிற்கு பிடித்த மற்றொரு நடிகைக்குத் தெரியவர, நடிகரைக் கையும் களவுமாக பிடித்து மிரட்டியுள்ளார். அதன் பின்னர் நடிகை, நடிகர் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

நடிகை தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் இந்தி சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை படங்களில் நடிக்கும் போதும் சரி, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும், சரி மிகவும் ஹோம்லியாக உடைகள் அணிந்து வருவார். நடிக்கும்போது தனது கதாபாத்திரங்களுக்கு மாடர்ன் உடைகள் அணிந்தாலும் கூட கிளாமர் உடைகள் அணிய மாட்டார். இப்படியான நடிகை இப்போது செம கிளாமர் உடைகள் அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்று சினிமா வட்டாரத்தில் பலரும் ஆச்சரியமாக பேசி வருகிறார்கள்.

எண்ணம்: அதாவது, நடிகை கடந்த சில ஆண்டுகளாகவே கிளாமரிலும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நடிகை கிளாமருக்கு செட் ஆக மாட்டார் என நினைத்த நடிகர்கள் நடிகையை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். ஆனால் நடிகை இப்போது, திருமணம் ஆகிவிட்டதால் நடிகையை பலரும் படங்களில் கமிட் செய்வதை தவிர்த்து வருகிறார்களாம்.

முடிவு: இது குறித்து தெரிந்து கொண்ட நடிகை, இனிமேல் ஹோம்லியாக இருந்தால் சினிமாவில் ஓரம் கட்டிவிடுவார்கள். எனவே கிளாமருக்கு மாறினால் தான் செட் ஆகும் என முடிவெடுத்துள்ளாராம். அதாவது, நடிகை இனி கமிட் ஆகும் படங்களில் செம கிளாமராக நடிக்க முடிவெடுத்துள்ளாராம். இதற்கு கணவரும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். காரணம் இதற்கு முன்னர் பல நடிகைகளை திருமணத்திற்கு பின்னர் திரையுலகம் ஓரம் கட்டி விட்டது. இப்படி இருக்கும்போது, தன்னை இந்த திரை உலகம் ஓரம் கட்டி விடக்கூடாது என்பதற்காக நடிகை இப்போது செம கிளாமராக நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

Tamil Cinema Gossips Actress Who Take Decision TO Act Glamour In Future

கிளாமர்: மேலும் ஏற்கனவே நடிகை ஒருவர் செம கிளாமராக நடித்து இந்திய சினிமா மார்க்கெட்டையே பிடித்துவிட்டார். எனவே தானும் அந்த நடிகை போல இந்திய சினிமா மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் எனவே கிளாமரில் இறங்கி அடிக்க நடிகை முடிவு செய்துவிட்டாராம். விஷயம் தெரிந்தவர்கள் இதெல்லாம் எங்க போய் முடிய போகிறதோ என பேசி வருகிறார்களாம். கணவரும் கண்டுகொள்ளாததால் நடிகை செம ஃபிரியாக இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X