இயக்குநரிடம் ஷோ காட்டிய நடிகை.. இந்த வேலை எல்லாம் மத்தவங்களிடம் வெச்சுக்க.. மிரட்டி விட்ட இயக்குநர்!

By Staff

சென்னை: இந்த நடிகை தமிழ் சினிமாவிற்குள் நுழையும்போது, அப்பாவி நடிகையாக கால் பதித்தார். ஆனால் இவரது நல்ல நேரமோ என்னவோ, இவரது முதல் சில படங்களில் அவருக்கு பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமா உலகில் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தாலும், இப்போது இந்த நடிகை போடும் ஆட்டம் ரொம்பவும் ஓவரா இருக்கிறதாம். இப்படியான நிலையில்தான் நடிகை சீனியர் இயக்குநரிடம் ஓவரா சீன் போட, அவரை படப்பிடிப்பு தளத்திலேயே ரைய்டு விட்டுள்ளாராம்.

மூத்த நடிகையாக இருந்தாலும் இன்னும் ரேஸில் ஓடும் குதிரை என்றே இந்த நடிகையை சொல்லலாம். அதே நேரத்தில் நடிகை கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறையில் ஓவர் சீன் போட்டு கொண்டு உள்ளார் என்ற பேச்சு பரவலாக உள்ளது. அதற்கு காரணம் நடிகையின் நடவடிக்கைகள் என்பதைக் காட்டிலும் நடிகையின் அட்ராசிட்டிகள் என்று கூறும் அளவிற்கு நடிகை மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளது.

அதாவது இந்த நடிகை பிரபல இயக்குநரை திருமணம் செய்து கொண்டார். இதனாலோ என்னவோ நடிகை ஓவர் தலைக்கணத்துடன் நடந்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், இவரை மணந்து கொண்டதாலே என்னவோ அந்த இயக்குநர் தயாரிப்பாளர்கள் தலையில் மனதார மொய் எழுதுகிறாராம். இந்த புகார் இயக்குநர் மீது இருக்க, நடிகை தான் நடிக்கும் படங்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன் போடுகிறாராம். இதனாலே பல தயாரிப்பாளர்கள் இந்த நடிகையை தங்களது படங்களில் கமிட் செய்ய தயங்குகிறார்கள். ஆனாலும் இந்த நடிகையைப் போட்டு படம் எடுத்தால் தென்னிந்தியாவில் கல்லா கட்டி விட முடியும் என்ற நம்பிக்கையில் சில தயாரிப்பாளர்கள் நடிகையை அணுகுகிறார்கள்.

Tamil Cinema Gossips Big Director slams Actress Who Behavior Over Attitude in Shooting Spot

நடிகை: நடிகையின் கால்ஷீட் வாங்கிவிட்டதால், இயக்குநர்களை அழைத்து கதை கேட்கிறார்கள். பல இயக்குநர்கள் இந்த நடிகையின் பெயரைக் கேட்டாலே தெறித்து ஓடுகிறார்களாம். காரணம், இந்த நடிகையின் கண்டிஷன்கள் நமக்கு கோபத்தை உண்டாக்கும் எனவே, அவரை வைத்து படம் எடுத்தால் பெரும் பிரச்னை ஏற்பட்டுவிடும் எனவே, நான் வரவில்லை என கமிட் ஆவதற்கு முன்னர், எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

இயக்குநர்: இப்படியான நிலையில்தான் இந்த நடிகையை இயக்க தமிழ் சினிமாவில் இருக்கும் மூத்த நடிகர் ஓ.கே. சொல்லி படத்தில் கமிட் ஆகியும் உள்ளார். படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் என அனைத்து வேலைகளும் இயக்குநர்தான். இந்த இயக்குநர் தமிழ் சினிமாவில் இருக்கும் பக்கா கமர்ஷியல் இயக்குநர் என பெயர் எடுத்தவர். இவரது படத்தில் நடித்தால், மக்கள் மத்தியில் நன்கு ரீச் ஆகிவிடலாம், இது மட்டும் இல்லாமல், மிகப்பெரிய ஹிட்டும் கொடுத்துவிடலாம் எனவும் பல நடிகர்கள் நடிகைகள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

சீன்: இப்படியான இயக்குநர் படத்தில் கமிட் ஆன நடிகை, படப்பிடிப்புத் தளத்தில் இதற்கு முந்தைய படங்களில் நடந்து கொண்டதைப் போல் ஓவரா சீன் போட்டுள்ளார். இதை முதல் நாளில் இருந்தே கவனித்து வந்த இயக்குநருக்கு செம கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில், கடந்த வாரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் நடிகை, இயக்குநரின் உதவி இயக்குநரிடம் ஓவரா சீன் போட்டு ஷோ காட்டியுள்ளார். இது குறித்து தெரிந்த உடனே நடிகையை படப்பிடிப்புத் தளத்தில் அனைவரது முன்னிலையில் லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டுள்ளார் இயக்குநர். இது குறித்து கேள்விப்பட்ட மற்ற இயக்குநர்கள் மூத்த இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X