நம்பி வந்த இளம் நடிகை.. படுக்கை அறையே கதி என இருந்த இயக்குநர்.. இப்ப புலம்பி என்ன பயன்?
சென்னை: சினிமா உலகில் எந்த அளவிற்கு நல்லவர்கள் உள்ளார்களோ அதைவிட பல மடங்கு கெட்டவர்கள் தான் உள்ளார்கள். மேலும் சினிமாக்காரர்கள் என்றாலே, பணத்திற்காகவும் புகழ் வெளிச்சத்திற்காகவும் திரைமறைவில் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற பேச்சு பொதுமக்களிடத்தில் உள்ளது. பொது மக்கள் நினைப்பது சரிதான், அதில் தவறு எதுவும் இல்லை என உணர்த்துவது போல சம்பவங்கள் அவ்வப்போது நடந்துவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நடைபெற்றுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட அக்கட தேசத்தில் இருந்து வந்த நடிகையை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாக இருந்தவர் ஹோட்டல் அறையில் வைத்து கசமுசாவில் ஈடுபட்டார் என ஓபனாகவே சொன்னார். மேலும் இதனை பல பேட்டிகளில் நடிகரின் பர்ஃபாமென்ஸ் இப்படி இருந்தது, அந்த நடிகர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார். இந்த நடிகருக்கு அவர் பெட்டர் என பேசினார். அதுபோல பேசினால் மக்கள் மனதில், சினிமாகாரர்கள் என்றாலே பணத்திற்காகவும் புகழ் வெளிச்சத்திற்காகவோ என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற எண்ணம் உருவாகி விடுவது இயல்பாகி வருகிறது.
ஆனால் இப்படியான விஷயத்தில் நடிகைகளை மட்டுமே பொது மக்கள் குறை கூறுகிறார்கள். நடிகைகளை வாய்க்கு கொடுக்கிறேன், வாழ்க்கை கொடுக்கிறேன் என தங்களது காம இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் குறித்தோ, தயாரிப்பாளர்கள் குறித்தோ, இயக்குநர்கள் குறித்தோ எதுவும் கூறுவதில்லை. தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள், அத்துமீறல்கள் குறித்து சில நடிகைகள் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களின் பெயரைக் குறிப்பிட்டு பேசுகிறார்கள். பல நடிகைகள் பட்டும் படாமலும் பேசிவிடுகிறார்கள்.

புலம்பல்: இப்படியான நிலையில் மலபார் தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்து நொந்து போன நடிகை ஒருவர் தான் எதிர்கொண்ட மோசமான அனுபவம் குறித்து இப்போது புலம்பி வருகிறாராம். அப்போது நடிகைக்கு பதின்பருவமாம். சினிமாவில் வந்த வாய்ப்பை விடக்கூடாது என கதையைக் கூட முழுமையாக கேட்காமல் நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார். நடிகை படத்தில் கமிட் ஆன பின்னர் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர், படத்தில் உள்ள பலான காட்சிகள் குறித்து இயக்குநர் கூறியுள்ளார்.
படுக்கையறை: நடிகையோ அம்மா திட்டுவாங்க, அப்பா அடிப்பாரு எனக் கூறியுள்ளார். ஆனால் இயக்குநரோ இந்த படத்தில் மட்டும் நீ நடித்தாய் என்றால் உனக்கு விருதுகள் பாராட்டுகள் குவியும் எனக் கூறியுள்ளார். நடிகையும் இயக்குநரே சொல்றாரு என நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். நடிகை இங்குதான் தவறு செய்துள்ளார். நடிகை ஓ.கே சொன்னதில் இருந்து பெரும்பாலும் பெட்ரூம் காட்சிகளைத்தான் எடுத்தாராம் இயக்குநர். அதிலும் டேக் போவதற்கு முன்னர், நடித்துக் காட்டுகிறேன் என நடிகையை கசக்கி எடுத்துள்ளார்.
அட்டகாசங்கள்: நடிகை வேறு வலி இல்லாமல், இயக்குநரின் அத்தனை அட்டகாசங்களையும் பொறுத்துப் போயுள்ளார். ஒரு வழியாக படம் முடிந்த பின்னர் ஃபைனல் கட்டில் பார்த்தால், படத்தில் பெரும்பாலான பெட்ரூம் காட்சிகளே இல்லை. என்ன சார் எடுத்ததில் பாதி கூட இல்லை எனக் கேட்டதற்கு சென்சாரில் தூக்கி விட்டார்கள் எனக் கூறி, நடிகையை ஆஃப் செய்துள்ளார். இப்போது நடிகை இதுகுறித்து புலம்பி வருகிறாராம். விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் இப்போது புலம்பி என்ன பயன் எனக் கேட்டு வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











