புருஷனை காப்பாற்ற தயாரிப்பாளருக்கு மொட்டை அடிக்கும் நம்பர் நடிகை.. ரேட்டை ரொம்பவும் ஏத்தீட்டாங்களாம்

By Staff

சென்னை: இந்த நடிகை இப்போது எல்லாம் சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஒரு காலத்தில் உச்ச நடிகையாக இருந்த இந்த நடிகையின் நிலை இப்போது ரொம்பவும் மோசமாக மாறிவிட்டது. காரணம், நடிகையின் நடவடிக்கைகள் அந்த அளவுக்கு மாறிவிட்டது. இப்போது அந்த நடிகை தனது கணவனைக் காப்பாற்ற, அதிரடியான முடிவில் களமிறங்கியுள்ளாராம்.
'
அதாவது, இந்த நடிகை தமிழ் சினிமாவிற்குள் வரும்போதே பல தடாலடி வேலைகளைப் பார்த்தவர்தான். முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போது, படத்தில் தனது கதாபாத்திரம் என்னவென தெரிந்தும், செம கிளாமர் உடை அணிந்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார். இவரைப் பார்த்த இயக்குநர், இன்னும் ஒரு ஷாட் கூட நடிக்கவில்லை அதற்குள் இவ்வளவு அளப்பறையா? எனக் கேட்டு விரட்டி விட்டுள்ளார். அதன்பின்னர் நடிகர் ஒருவர் பேசி, சமாதானப்படுத்திய பின்னர்தான் அந்த நடிகை படத்தில் நடித்தாராம்.

இந்த படத்திற்கு பின்னர் இரண்டு கதாநாயகிகள் இருக்கும் படத்தில் கமிட் ஆன நடிகை, தனக்கு ஹோம்லியாக டிரஸ் கொடுத்துக் கொண்டு உள்ளீர்கள், நான் மக்கள் மத்தியில் ரீச் ஆக வேண்டும் என ஹாலிவுட் ரேஞ்சுக்கு செம கிளாமர் ஆடைகள் அணிந்து நடிக்க முயற்சி செய்துள்ளார். என்னம்மா இப்படி வந்து நிற்கிறாய் என இயக்குநர் கேட்டதற்கு இந்த காட்சியில் ஆவது இப்படி நடித்துக் கொள்கிறேன் சார். அப்போதுதான் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். ஆத்திரப்பட்ட இயக்குநர் நடிகையை திட்டு திட்டு என திட்டி எடுத்துள்ளார். அந்த மாதிரி நடிக்க என் படம் செட் ஆகாது, எனவே வேறு இயக்குநர் இருந்தால் பார்த்துக் கொள் என கூறியுள்ளார்.

Tamil Cinema Gossips Number Actress Who Increse Her Salary For Save Her Husband Tamil Cinema Gossips Number Actress Who Increse Her Salary For Save Her Husband

நடிகை: நடிகையின் இந்த ஆசையை தெரிந்து கொண்ட இயக்குநர் ஒருவர் இவரை தனது படத்தில் புக் செய்து தாராளமாக கவர்ச்சி காட்டச் சொல்லி உள்ளார் இயக்குநர். உடனே பிகினியில் நடந்துவந்து கவர்ச்சியில் மிரட்டி விட்டாராம் நடிகை. இப்படியெல்லாம் திட்டம்போட்டு தனக்கான மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்ட நடிகை இப்போது மிகவும் சிக்கலில் உள்ளாராம்.

கணவன்: அதாவது இவர் இயக்குநர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து சினிமாவில் ரொம்பவும் அழிச்சாட்டியம் செய்வதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள். காரணம் அவர்களின் நடவடிக்கை. இப்போது இவரது கணவர் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் படத்தை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு எடுத்துக் கொடுக்கும்படி ஒப்பந்தம் போட்டுள்ளார். நடிகையின் கணவரும் ஒப்பந்தத்திற்கு ஓ.கே. சொல்லி படத்தை தொடங்கியுள்ளார். ஆனால் இப்போது தயாரிப்பாளர் சொன்னதை விடவும் பட்ஜெட் எகிறி விட்டது.

தயாரிப்பாளர்கள்: இது மட்டும் இல்லாமல் இயக்குநர், மேலும் சில கோடிகள் வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத தயாரிப்பாளர், இதுவரை இவ்வளவு செலவு ஆகியுள்ளது. அந்த பணத்தை கொடுத்துவிட்டு படத்தை நீங்களே மொத்தமாக டேக்-ஓவர் செய்து கொள்ளுங்கள் என ரொம்பவும் கராராக சொல்லியுள்ளார். இதனால் கணவனைக் காப்பாற்ற, நடிகை தான் ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படத்தில் தனது சம்பளத்தை தாருமாறாக உயர்த்தியுள்ளார். இதில் சில தயாரிப்பாளர்கள் நடிகை இழுத்த இழுப்புக்கு வருகிறார்களாம். சிலர் இந்த நடிகை என்ன, நம்ம தலையில் மொட்டை அடிக்கிறது என நடிகையை படத்தில் இருந்து நீக்கி விடலாமா என யோசித்து வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X