ஒரு படம் அப்படி இப்படி நடித்த நடிகையை.. நேரடியாவே போன் போட்டு அதுக்கு கூப்பிடுகிறார்களாம்.. புலம்பல்

By Staff

சென்னை: சினிமா உலகில் எப்போதுமே ஒரு நடிகரோ நடிகையோ மற்றவர்கள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்தால் உடனே பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவர்களை அதேபோல கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பார்கள். இதனால் வாழ்க்கையை இழந்த பல நடிகைகள் உள்ளார்கள். இளம் வயதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஒரு நடிகை நடித்துவிட்டால் மறுபடியும் அந்த நடிகையை ஒரு லவ் சப்ஜெக்ட்டில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.

அதேபோல் நடிகை ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விட்டால் அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருப்பார்கள். அதை சரியாக பயன்படுத்துபவர்களும் உள்ளார்கள், அதனால் சினிமாவில் எதிர்காலத்தையே இழந்தவர்களும் உள்ளார்கள். அப்படித்தான் ஒரு நடிகையை நடிக்க தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அழைத்துக் கொண்டே உள்ளார்களாம். இதனால் நடிகை என்ன செய்வது எனத் தெரியாமல் புலம்பி வருகிறார்.

அதாவது நடிகை ஏற்கனவே தெலுங்கு மற்றும் கன்னடத்தில் கவனம் ஈர்க்கும் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது தமிழில் ஒரு படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தாராளமான கிளாமர் காட்சிகளில் நடித்து அசத்தினார். ஏற்கனவே இந்த நடிகை தமிழ் ஆடியன்ஸுக்கு பரிட்சயமானவர் என்பதால், நடிகையின் இந்த கிளாமரை பலரும் எதிர்பார்க்கவில்லை. இந்த நடிகையின் கிளாமர் காட்சிகளை பார்க்க தியேட்டரில் கூட்டம் கலை கட்டியது. இதனால் படமும் வெற்றிப் படமாக மாறியது.

Tamil Cinema Gossips Number Actress Who Take Decission For No Glamour On Next FEW Years

கிளாமர்: இதனைப் பார்த்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நடிகைக்கு நேரடியாக போன் செய்து தங்களது படத்திலும் அதுபோல கதாபாத்திரம் உள்ளது, ஏற்கனவே நடித்த கிளாமரை விட கொஞ்சம் எக்ஸ்ட்ரா மீட்டர் தேவைப்படுகிறது, சம்பளம் எவ்வளவு சொன்னாலும் சரி, என்ன சொல்லுகிறீர்கள் என கேட்கிறார்களாம். தொடக்கத்தில் போன் செய்து கேட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் மறுத்து வந்த நடிகை, இப்போது தான் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிசியாக இருக்கிறேன் எனவே என்னால் நடிக்க முடியாது சாரி எனக் கூறிவிடுகிறாராம்.

முடிவு: நடிகையின் இந்த பதிலை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் எதிர்பார்க்கவில்லையாம். அதுவும் சம்பளம் இரட்டிப்பாக தருகிறேன் எனக் கூறியும் நடிகை நடிக்க மறுக்கிறார் என்றால் ஏதாவது காரணம் இருக்கும் என பேசி வருகிறார்கள். ஆனால் நடிகை ரொம்பத் தெளிவாக, கிளாமர் படங்களில் அடுத்த சில ஆண்டுகளுக்கு நடிக்க கூடாது என முடிவு எடுத்து விட்டாராம். காரணம் பணத்திற்காக கிளாமர் காட்சிகளில் நடித்தால் அதன் பின்னர் மற்ற கதாபாத்திரங்களுக்கு நடிக்க அழைக்க மாட்டார்கள் எனவே, அடுத்த சில ஆண்டுகளுக்கு கிளாமர் இல்லாத படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். நடிகையின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X